மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்காக இந்தத் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாசகர்களும் குர் ஆன்,சுன்னாவை அடிப்படையாக வைத்து islamiyatheerppu@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் கட்டுரைகளை அனுப்ப முடியும் என்பதை அன்பாய்த் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, July 19, 2011

பாசிச சிந்தனையை நிலைநாட்ட குர்பானியை கொச்சைப் படுத்திய அவன் இவன் பாலா.


இஸ்லாத்தை கொச்சைப்படுத்த நினைக்கும் பாசிச சிந்தனை கொண்டவர்கள் எல்லாத் துறைகளிலும் தடம் பதித்திருப்பது நாம் அறிந்ததே! அதிலும் சினிமாத் துறை என்ற பெயரில் நாளுக்கு நாள் சமுதாய சீர் கேட்டை வளர்க்கும் சினிமாக்காரர்கள் தங்கள் பாசிச உணர்வை, இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கையை நிலை நாட்ட பல சந்தப்பங்களில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை சினிமாக்கள் மூலமாக சித்தரிக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள்.

இஸ்லாமியர்கள் அன்பு, பாசம் போன்ற குணங்கள் அற்றவர்கள்.

கொலை வெறி பிடித்தவர்கள்.

கல்ல நோட்டு அடிப்பவர்கள்.

தேசத் துரோகிகள்.

மிருக வதை  செய்பவர்கள் போன்ற தவறான கருத்துக்களை இவர்கள் அடிக்கடி இந்த சினிமாத் துறை மூலம் மக்கள் மனதில் பதிய வைக்க முனைகிறார்கள், முயற்சி எடுக்கிறார்கள்.



விஜயகாந்த் போன்றவர்கள் தங்களின் சினிமாப் படங்கள் மூலமாக பல சந்தர்பங்களில் முஸ்லீம்களை தீவிரவாதியாக காட்டியதும் நாமறிந்த்தே.

அதே போல் பம்பாய் என்ற பெயரில் ஏற்கனவே மணிரத்தினம் என்ற ஒரு இயக்குனர் முழுமையாக முஸ்லீம்களை தீவிரவாதியாக காட்ட முனைந்த்தும் அதற்கு கிளம்பிய எதிர்பலையில் அவர் பல இடங்களில் தனது சுய கவுரவத்தை இழந்த்தும் வரலாற்று உண்மைகள்.



இப்படி காலத்திற்கு காலம் தாம் எடுக்கும் சினிமாக்கள் பல நாட்கள் ஓட வேண்டும் என்பதற்காக முஸ்லீம்களை வைத்துப் பிழைப்பு நடத்துவது இவர்களுக்கு பழகிப் போன கதையாகிவிட்டது.

அதன் தொடரில் தற்போது சினிமா இயக்குனர் பாலாவும் சேர்ந்துள்ளார். தாம் எடுக்கும் சினிமாவின் கருத்தை சொல்ல வருபவர்கள் அவர்கள் பாட்டிற்கு எதையாவது சொல்லிவிட்டுப் போனால் நாம் கண்டு கொள்ள மாட்டோம் சீர் கெட்டவர்கள் என்ன சொன்னால் என்ன என்று விட்டு விடலாம்.

ஆனால் இவர்கள் நம்மை சீண்டிப் பார்க்கும் போதுதான் அவர்களுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது.

அவன் இவன் என்ற பெயரில் பாலா எடுத்திருக்கும் ஒரு சினிமாப் படத்தில் முஸ்லீம்களின் மார்க்கக் கடமையான குர்பானியை கிண்டல் செய்திருப்பது கண்டிக்கத் தக்கதாகும்.

கல்லத் தனமாக மாட்டு வியாபாரம் செய்யும் ஒருவனை காட்டிக் கொடுத்ததற்காக, வியாபாரம் செய்தவன் காட்டிக் கொடுத்தவனிடம் அவனைத் தண்டித்து கோபத்துடன் பேசும் போது, குர்பானியை கிண்டல் செய்வதைப் போல் அந்தக் காட்சியை படமாக்கியுள்ளார். அவன் இவன் பாலா.

ஏண்டா!, மாட்ட வெட்டி திங்கிறதுக்கே இந்த உருகு உருகிறே!, எங்கோ இருக்கிற ஒட்டகத்தை அவனுவ இங்க கொண்டாந்து வெட்டி திங்கிராங்கல்ல!. அது பேரென்னடா!. குருதானியா?. என்று அருகில் உள்ளவனிடம் கேட்கின்றான்.

அதற்கு அவன், குர்பானி அண்ணே!. என்று அவனுக்கு சொல்லி கொடுக்கின்றான்.

பின் அவனை போய் கேளு!, அவனைபோய் கேளு!! என்று கத்துகின்றான்.



தான் சொல்ல வரும் கருத்தை சொல்லிவிட்டு போவதை விட்டு விட்டு முஸ்லீம்களின் மார்க்கக் கடமைகளில் ஒன்றான குர்பானியை வேண்டுமென்றே இழுத்துக் பொட்டுள்ளார் பாலா.


பாலா படிக்க வேண்டிய பாடம்.

இஸ்லாமியர்கள் உயிர் வதை செய்பவர்கள், மிருக வதையில் ஈடுபடுபவர்கள் என்ற கருத்தை நிலை நிறுத்தத் தான் பாலாவின் இந்த முயற்சி நடந்துள்ளது.





ஆனால் பாலா நினைப்பது தவறு என்று புரிய வைக்கும் கடமை நமக்கும் உள்ளது. சினிமா என்ற சீர் கேட்டில் மூழ்கி மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கும் பாலா போன்றவர்கள் முஸ்லீம்களை வம்புக்கு இழுப்பதை விட்டுவிட்டு முஸ்லீம்களை கடமைகளில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.



தங்களின் சினிமாக்களில் பாசிச சிந்தனையை விதைப்பதற்கு முஸ்லீம்களை சீண்டிப் பார்ப்பதை இனிமேலாவது விட்டு விட வேண்டும்.

Monday, July 18, 2011

அரசியலாக்கப்படும் ரிசானா நபீக் விவகாரமும், விமர்சிக்கப்படும் இஸ்லாமிய குற்றவியல் சட்டமும். 
புரிந்து கொள்ளுமா முஸ்லிம் சமுதாயம்?


ரிசானா நபீக் விஷயமாக மாற்று மத அன்பர்கள் எப்படி புரிந்து கொண்டார்கள், அரசியல் கட்சிகள் ஏன் இந்த விஷயத்தை இவ்வளவு பெரிதாக்க வேண்டும்? முஸ்லீம்கள் இந்த விஷயத்தில் எத்தகைய நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றிய செய்திகளை ஆராய்வதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மூதூர் என்ற முஸ்லீம்கள் செறிந்து வாழும் ஊரைச் சேர்ந்தவர் சகோதரி ரிசானா நபீக்.

இவர் கடந்த 2005ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவிற்கு வேலை வாய்பிற்காக சென்றார். அவர் வேலை செய்த இடத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரிசானாவிற்கு ஆதரவாக பல அமைப்புக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.


கடந்த 2005ம் ஆண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவுதிக்கு சென்ற ரிசானா தனது எஜமானரின் குழந்தையை கொலை செய்தார் என்பதே ரிசானா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டாகும். இந்தக் குற்றச் சாட்டு விசாரிக்கப்பட்டு ரிசானா குறிப்பிட்ட குழந்தையை கொலை செய்தார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து சவுதி தவாமி நீதி மன்றம் ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்து 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. தவாமி நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம், ஹாங்காங்கில் உள்ள ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் உதவியுடன் ரியாத் உயர் நீதி மன்றத்தில் ரிசானாவுக்கு ஆதரவாக வழக்குத் தாக்கல் செய்தது.

இந்த மேன் முறையீட்டின் விசாரனை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரியாத் உயர் நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது அப்துல்லாஹ் அல் ரவ்சாமி தலைமையிலான மூன்று பேர்களை கொண்ட நீதிபதிகள் குழு ரிசானா நபீக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டு உண்மையானதும், நிரூபிக்கப்பட்டதுமாகும் என்று தீர்ப்பு வழங்கி, ரிசானாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்கள்.


இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், ரவுப் ஹக்கீம் போன்றவர்கள் ரிசானா நபீக் விஷயத்தில் சவுதி அரசு மண்ணிப்பு வழங்க வேண்டும் என்று சவுதியை கேட்டுக் கொண்டார்கள்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ரிசானாவை விடுவிக்கும்படி கோரிக்கை வைத்து சவுதி அரேபிய மன்னருக்கு கடிதம் எழுதினார்.

ஆசிய மனித உரிமைகள் அமைப்பு முதல் இலங்கை எதிர்க்கட்சிகள் வரை ரிசானாவை விடுதலை செய்யும்படி அறிக்கை வெளியிடுவதும், போராட்டங்கள் நடத்துவதுமாக ரிசானாவின் விஷயத்தை பல தரப்பாலும் அரசியலாக்கிவிட்டார்கள்.

கட்சிகளின் அரசியல் நோக்கம் என்ன?

இன்று பல கட்சியினரும் ரிசானா நபீக் தொடர்பான தங்கள் கருத்துக்களை வெளியிட்ட வண்ணமே உள்ளார்கள். அவ்வப்போது சிலர் போராட்டங்களையும் நடத்துகிறார்கள்.

ரிசானாவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அனைவரும் ரிசானாவை ஏன் விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக சொல்லும் காரணங்கள் என்ன தெரியுமா?

இளம் வயதுப் பெண்.

அவருடைய குடும்பம் வருமையில் உள்ளது.

தங்குவதற்கு ஒரு சரியான வீடு கூட இல்லை.

இது போன்ற காரணங்கள் கூறப்பட்டு ரிசானா நபீக் மீது நாடளாவிய ரீதியில் ஒரு அனுதாப அலையை உருவாக்கியுள்ளார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

ரிசானா மீது ஏற்படுத்தப்படும் அனுதாப அலைகள் ரிசானாவை நிரபராதி என்று சொல்வதற்குறிய ஆதாரங்கள் இல்லை. ரிசானா தவறு செய்யவில்லை என்றால் அதனை அவர் நிரூபிக்கக் கடமைப் பட்டுள்ளார்.

ஆசிய மனித உரிமைக் கழகம் மற்றும் சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் ஆகியவை இணைந்து ரிசானாவுக்காக நடத்திய வழக்கில் ரிசானா தரப்பின் கருத்தை நிரூபிக்க முடியாமல் போய்விட்டது. குறிப்பிட்ட குழந்தை கொலை செய்யப்பட்டுத்தான் இறந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டது.

நிலைமை இவ்வாறு இருக்க இல்லை ரிசானா மீது இஸ்லாமிய குற்றவியல் சட்டம் புகுத்தப்படுகிறது.

இந்தச் சட்டம் கொடூரமானது என்றெல்லாம் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதும் சில முஸ்லீம் பெயர் தாங்கிகளும் கூக்குரலிடுவது இஸ்லாமிய சட்டத்தை கேவலப்படுத்துவதாகும்.

இலங்கை முஸ்லீம் உரிமைகள் அமைப்பின் போராட்டமும், ரஞ்சன் ராமநாயக்கவும்.

ரிசானா நபீக்குக்கு வழங்கப்பட்ட தண்டனை திரும்பப் பெறப்பட வேண்டும் என்று இலங்கையில் கருத்து வெளியிடுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பவர்கள் இலங்கை முஸ்லீம் உரிமைகளுக்கான அமைப்பினர்.

இவர்கள் ரிசானாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தவறானது எனக் கூறி ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இஸ்லாமிய குற்றவியல் தொடர்பான அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களை நிர்வாகிகளாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, கூடவே சில அரசியல் வாதிகளையும் தம் தரப்புக்கு ஊது குழலாக்கியுள்ளது.

எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமனாயக்க, கொழும்பு மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் தாம் தற்போது ரிசானாவின் பாதுகாவலர்களாக தங்களை காட்டிக் கொள்ள நினைப்பவர்கள்.

இவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் ஷரீஆ சட்டத்தை இவர்கள் விமர்சித்தமை இங்கு கண்டிக்கத் தக்கதாகும்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின்படி யார் குற்றம் செய்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் கண்டிக்கபட வேண்டியவர்களே.

ரஞ்சனுக்கும், முஜிபுர் ரஹ்மானுக்கும் முஸ்லீம்களிடம் தங்களுக்கு இல்லாமல் போன அரசியல் மதிப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக தற்போது கிடைத்திருக்கும் செய்திதான் இந்த ரிசானா நபீக் விவகாரம்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சவுதி மன்னருக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த சவுதி மன்னர் ரிசானா நபீகை மன்னிக்கும் அதிகாரம் தனக்கில்லை என்றும் அந்த அதிகாரம் பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்க மாத்திமே உள்ளதாகவும், அவர்கள் மன்னித்தால் ரிசானா விடுவிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளமை இங்கு கவணிக்கத் தக்கதாகம்.

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் முஜீபுர் ரஹ்மான் போன்றவர்கள் சவுதி மன்னரின் இந்த பதிலை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் ரிசானாவின் அனுதாப அலையைச் சொல்லி மக்களை குழப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் இந்தப் போராட்டங்களினால் எந்தப் பிரயொஜனமும் ரிசானாவுக்கு ஏற்படப் போவதில்லை என்பதை ரிசானாவை சிறையில் சுமார் 15 தடவைகளுக்கும் மேலாக சந்தித்த இலங்கை மத்திய மாகாணம் கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் கிபாயா அவர்கள் தெரிவித்துள்ளமையும் இங்கு கவணிக்கத் தக்கதாகும்.

இலங்கையின் நிவ் லங்கா டுடே இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டிருப்பதாவது.

நான்   தன்னிச்சையாகவே ரிஸானாவின் விடயத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.  ரிஸானா  அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறை நான் தொழில் செய்யும் ரியாத்திலிருந்து 470  கிலோ மீட்டருக்கப்பால் இருக்கிறது.  நான் ரிஸானாவை  சுமார் 15தடவைகள் சிறையில் சந்தித்திருக்கிறேன்.
ஷரீஆ  சட்டத்தைப் பற்றி சரியாகப் பரிந்து கொள்ளாதவர்களே சவூதி அரேபியாவின்  சட்டம் கடினமானது என விமர்சிக்கிறார்கள். நான் ரிஸானாவை சந்திக்க அனுமதி  கோரிய போதெல்லாம் சவூதி அதிகாரிகள்  எனக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள்.
சிறைச்சாலை என்றதும் எமது நாட்டிலுள்ள இரும்புக் கம்பிகளையும் இரும்புச் சங்கிலிகளையும் கற்பனை செய்து கொண்டே இங்குள்ளவர்கள் சவூதியை விமர்சிக்கிறார்கள். ஆனால் ரிஸானா சிறை வைக்கப்பட்டுள்ள இடம் வீட்டுச் சூழலை  ஒத்ததாகும். 
நான்  ரிஸானாவைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவள் மிகவும் தெளிந்த மன நிலையில் காணப்படுகின்றாள். என்னை நோனா என்று அழைப்பாள். நான் அவளிடத்தில் நெருக்கமாகப் பேசும்போது என்னுடன் சாச்சி (சிறிய தாயார்) என்று உரிமையுடன் பேசுவாள். உம்மாவுடன் டெலிபோனில் பேச வேண்டுமாஎன்று கேட்டால் உங்களுக்கு பணம் செலவாகுமே என்று என்னிடத்தில் 
கேள்வி எழுப்புவாள். மூதூரிலுள்ள  தாயாருடன்  பேச தொலைபேசி தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தால் உறவினர்களும் பேசுவார்கள்.
சிறைச்சாலையில்  தொழுவதற்கும் நோன்பு நோற்பதற்கும் அவளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 
ரிஸானாவின்  தண்டனை விடயத்தில் சவூதி ஊடகங்களும் சமூகமும்  80முதல்  90 வீதமான அபிப்பிராயங்கள் அவளது விடுதலையையே ஆதரிக்கின்றன.
ரிஸானா சிறு வயதுக்காரி அவளுக்கு இத்தண்டனை கூடாது என்று போராடுகிறார்கள். ஆனால் சவூதி பதிவுகளும் கடவுச்சீட்டு விபரங்களும் அப்படி இல்லை. எனவே அவள் சிறுமி என்ற வாதத்திற்கே இடமில்லை. 

விரும்பியோவிரும்பாமலோ இந்தப் பொறுப்பை இலங்கை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்தத் தவறு இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ரிஸானாவின்  விடுதலை  தொடர்பாக நடாத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களும்  ஊர்வலங்களும் மிக மோசமான  பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நடவடிக்கைகள் ஒரு போதும்  அவரது விடுதலைக்கு உதவமாட்டாது. மாறாக  இது ஆபத்தையே உண்டு பண்ணும்.
சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் ரிஸானா விடயத்தில் தலையிட்டி ருக்கும்போது அரசும் சர்வதேசமும் ஒன்றும் செய்யவில்லை என்று கூறும் வாதம் அரசியல் மேடைகளுக்கும் கோஷங்களுக்கும் உதவுமே தவிர ரிஸானாவின் விடுதலைக்கு  அவை  ஒரு போதும் உதவமாட்டாது.  

ஜனாதிபதி  சவூதி மன்னருக்கு எழுதியுள்ள உருக்கமான  கடிதம் சவூதி மன்னரின் கவனத்தை ஈர்க்கும்  என்று நம்புகிறேன் என்றாலும்   மன்னருக்கு கூட மன்னிப்பு வழங்க முடியாது. சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து அவர்களிடத்தில் மன்னிப்பு தொடர்பான வேண்டுகோளை மாத்திரம் மன்னரினால் முன்வைக்க முடியும். இந்த விடயம் மாத்திரமே நடைபெற வேண்டி இருக்கிறது.

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் கொடூரமானவையா?

"இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவைமனிதாபிமான மற்றவை'' என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.

ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.

குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப்போவதில்லைகற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப்போவதில்லைபொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.

இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய காரணம் என்ன?

1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனைமீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளா னவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மன நிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும்குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள்காவல் நிலையங்கள்நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.

அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.

குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?

திருட்டுகற்பழிப்புகொலைகொள்ளைஇன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்னசில மாதங்களோ,சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும் பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்னவெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

நியாயமாகவும்நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும்அயோக்கியத் தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக் குள்ளேயே செய்து தரப்படுகின்றன.

இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்ன வென்றால்எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோஎந்த மக்களைக் கொலை செய்கிறானோஎந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோஅந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

இந்தப் பெயரளவிலான தண்டனை யால் ஒரு பயனும் ஏற்படாது;ஏற்படவில்லை.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!

15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!

என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.

சிறைச் சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் "நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்?ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே'' என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

மேலும் குற்றவாளிகள் சிறைச் சாலைகளில் கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர்.

சிறைச் சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.

ஆண்டு தோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்குற்றங்கள் பெருகுகின்றனகுற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது.

மனிதாபிமானச் (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மன நிறைவு அடைவானா?என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருட்டுக் கொடுத்தவனிடம் போய் திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் "ஆறு மாதம் சோறு போடலாம்'' எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் "பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும்'' என்று கூறுவானாதலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள்அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது.

ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையைக் கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோமச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறதுஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால்இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண்பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

கண்ணை இழந்தவன் குற்ற வாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் இழப்பீட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.

அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படா விட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளி யாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும்சிறைச் சாலையிலிருந்து நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? "கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது'' என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.

இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளதுஅறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள்பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்;திருடவும் முடியாது.

மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.
முதன் முதலாகத் திருட எண்ணுபவ னும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறிகொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

"இவர்கள் இங்கே இருக்கிறார்களா?'' என்று திருடர்களின் புகைப் படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாள மாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.

"பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!'' என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

நேர்மையையும்ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல்அவனை நடுத் தெருவில் நிறுத்திய அயோக்கிய னுக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.

இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாதுவெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.

உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன.

கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும்உடமைக்கும்கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும்.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்திகடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.

திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா?என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.

மேலும் "எடுத்தேன்கவிழ்த்தேன்'' என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.

மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 24:4, 24:13)

இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.

(மேலதிக தகவல்களுக்கு திருமறைக் குர்ஆனின் இந்த வசனங்களையும் பார்த்துக கொள்ளலாம் : 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4)
(பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கம்.)

பெண்களிடம் ஓர் வேண்டுகோள்.

அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே! சகோதரி ரிசானா நபீக் இன்று ஒரு கொலையாளியாக நம் முன் நிற்பதற்கான காரணம் உழைப்பிற்கான தனது வெளிநாட்டுப் பயணம் தான்.

மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்பைத் தேடிச் செல்வது இலங்கையில் தான் அதிகமாக உள்ளது.

இஸ்லாத்தை சரியான முறையில் நாம் புரிந்து கொண்டால் இந்த பிரச்சினை நமக்கு ஏற்படவே மாட்டாது என்பதுதான் உண்மையாகும். இஸ்லாமிய சட்டத்தில் பெண்கள் உழைக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு திட்டமே கிடையாது உழைப்பதை ஆண்களுக்குத்தான் இஸ்லாம் கடைமையாக்கியுள்ளதே தவிர பெண்களுக்கு அல்ல.

தந்தையர்களே! கணவர்களே!

உழைப்பது உங்கள் மீது கடமை என்று இஸ்லாம் தெளிவாக தெரிவித்துள்ள போது அதனை மீறி உங்கள் மனைவியரை, பிள்ளைகளை நீங்கள் வேலை வாய்பைத் தேடி வெளிநாட்டுக்கு அனுப்புகிறீர்கள் இது எந்த விதத்தில் நியாயமானது. உங்கள் மனம் உறுத்தவில்லையா? நீங்கள் செய்யும் இந்த கேவலமான செயல்பாட்டினால் இஸ்லாமிய ஷரீஅத் சட்டமே விமர்சிக்கப்படுகிறதே இதை நீங்கள உணர வேண்டாமா?

Tuesday, July 12, 2011

அவ்லியாக்களின் சிறப்புகளும், தரீக்காக்களும்.

புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)
ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம்.
அவ்லியாக்கள், மகான்கள், நாதாக்கள், பெரியார்கள், தரீக்காவின் ஷைகுமார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்களை வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கக் கூடாது; அல்லாஹ்வின் ஆற்றலை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மதிப்பது போன்று இவர்களை மதிக்கக் கூடாது என்றும் கூறுகிறோம். அந்தப் பெரியார்களை மதிக்கிறோம் என்ற பெயரால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது என்கிறோம்.
இவ்வாறு நாம் கூறுவதால், நாம் அவ்லியாக்களையே அவமதித்து விட்டதாக அலறுகின்றது சமாதிகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம். நம்மை சமூகப் பகிஷ்காரம் செய்யும்படி மக்களைத் தூண்டி விடுகின்றது ஷைகுகளின் காலடியில் சுவர்க்கத்தைத் தேடிக் கொண்டிருக்கும் கூட்டம். அவர்களைப் போலவே நாமும் அவ்லியாக்களைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும், அவ்லியாக்களின் சிறப்பை நாமும் பறைசாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றது.
இவர்களின் ஆசையை நிறைவேற்றுவது என்று நாம் முடிவு செய்து விட்டோம். அவர்கள் அவ்லியாக்களைப் பற்றி அரபுக் கிதாபுகளில் அறிமுகம் செய்து வைத்திருப்பதை பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அதைத் தமிழில் தருவது என்று தீர்மானித்து விட்டோம். இதற்காக அவர்கள் நமக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.
நிர்வாணச் சாமியார்.
அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி என்பவர் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரிய இமாம். அவ்லியாக்களை மதிப்பதில் இவர் முதல் இடத்தில் இருப்பதாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஃபத்வாக்கள் வழங்கும் போது இவரது கூற்றையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆன்மீகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர் எனவும் இவரை சுன்னத் ஜமாஅத்தினர் புகழ்ந்து கூறுவதுண்டு. இரகசிய ஞானம், ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற சித்தாந்தங்களுக்குப் புத்துயிரூட்டியவர் இவர். ஷைகு, முரீது வியாபாரத்திற்கு அதிக அளவு விளம்பரம் செய்தவர்.
அவ்லியாக்கள், ஷைகுமார்கள் ஆகியோரின் வரலாறுகளைக் கூறுவதற்காகவே பல வால்யூம்களில் இவர் தபகாத் என்ற பெரும் நூல் எழுதியுள்ளார். மத்ஹபுவாதிகளாலும், (அஞ்)ஞானப் பாட்டையில் நடப்பவர்களாலும் ஒருசேர மதிக்கப்படுபவர் இவர்.
இவர் எழுதிய தபகாத் நூல், அவ்லியா பக்தர்களுக்கும் முரீதீன்களுக்கும் வேதம். இவரது இந்த அரிய பொக்கிஷம் பெரிய பெரிய அரபிக் கல்லூரிகளில் நூலகங்களை இன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.
அரபு தெரிந்தவர்கள் மட்டுமே படித்து ரசித்து வந்த இந்தப் பொக்கிஷத்தை அரபு தெரியாதவர்களும் ரசிக்க வேண்டாமா? என்ற நல்லெண்ணத்தில் சில பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறோம். படித்து விட்டு அவ்லியாக்களை மதியுங்கள். நமது சொந்தக் கருத்தாக எதையும் இங்கே நாம் கூறவில்லை. அந்த நூலில் இடம் பெற்றுள்ள அரபி வாசகங்களில் நேரடித் தமிழாக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. குறிப்பு என்று போடப்பட்ட விஷயங்கள் மட்டும் நமது விமர்சனம்.
அஷ்ஷைகு இப்ராஹீம்.
அந்த இறை நேசச் செல்வர்களில் ஒருவர் தான் அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி) அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள்.
(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)
(குறிப்பு: அவ்லியாக்களின் புகழ் பாடும் ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் இந்த மகானின்(?) வழியில் ஜும்ஆ மேடைகளில், இந்த அவ்லியாவைப் பின்பற்றி நிர்வாணமாக தனது பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்று எதிர்பார்ப்போமாக!)
இந்தப் பெரியார், பெரியவர்கள் முன்னிலையில் வைத்துக் காற்றை வெளிப்படுத்துவார். (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார்.
(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)
(குறிப்பு: இவ்வளவு கீழ்த்தரமாக நடந்தவர் தான் இறைநேசச் செல்வர்களில் ஒருவராம். இங்குள்ள நிர்வாணச் சாமியார்களுக்குக் கூட இவர் தான் முன்மாதிரியாக இருக்கக் கூடும். இந்த நிர்வாணச் சாமியாருக்கு ஏற்பட்ட அற்புதத்தைக் கேளுங்கள்.)
இந்தப் பெரியாரிடம் எனது தலைவர் முஹம்மது இப்னு ஷுஐப் சென்ற போது அவர் அந்தரத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஏழு கண்கள் இருந்தன.
இந்தப் பெரியாரைப் பற்றி அபூ அலீ என்பார் குறிப்பிடும் போது, அவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாக அவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போது தங்கமாக, வெள்ளியாக அவை மாறும்.
(குறிப்பு: இவை சிறுவர் மலரில் இடம் பெறும் ஜோவின் சாகசம் அல்ல. பல அவதாரங்கள் பற்றிக் கூறும் புராணக் கதைகளும் அல்ல. அவ்லியாக்களை மகிமைப்படுத்தும் தபகாத் நூலில் பாகம்: 2, பக்கம் 80, 81ல் காணப்படும் விஷயங்கள் தான் இவை. பொட்டல் புதூரில் யானை அவ்லியா இருப்பதைப் போன்று இனி வெட்டுக்கிளி அவ்லியா, காண்டாமிருக அவ்லியா என்று தர்ஹாக்கள் தோன்றினாலும் ஆச்சரியமில்லை.)
அபூ கவ்தா.
அந்த இறை நேசச் செல்வர்களில் அபூகவ்தா எனும் அலீ அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒரு பெண்ணையோ, பருவமடையாச் சிறுவனையோ கண்டால்................................... அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும், மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள், மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களை அவர் கவனிக்க மாட்டார்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 149)
குறிப்பு: கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்து கொள்க! அதை மொழியாக்கமும் செய்யவில்லை. அவ்லியாக்களை மதிக்கும் இலட்சணமும் அவ்லியாக்களின் இலக்கணமும் இது தானா?
சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் அவ்லியா? இறை நேசச் செல்வன்? இந்த அவ்லியா பக்தர்கள், ஷைகுமார்களிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று இது போன்று செய்வதற்கு அனுமதிப்பார்களா?
ஸய்யித் அஹ்மத் அல்பதவீ.
எனது ஷைகு அவர்கள், ஸய்யித் அஹ்மத் அல்பதவீ அவர்களின் அடக்கத்தலத்தில் ஒரு உடன்படிக்கை எடுத்தார். என்னை அஹ்மத் பதவியிடம் ஒப்படைத்தார். அப்போது கப்ரிலிருந்து சிறப்பான கை வெளிப்பட்டது. என் கையைப் பற்றிக் கொண்டது. அப்போது என் ஷைகு ஷனாவீ அவர்கள், கப்ரை நோக்கி, உங்கள் கவனம் இவர் மீது இருக்கட்டும்! உங்கள் கண்காணிப்பில் இவரை வைத்துக் கொள்க! என்று (எனக்காக) வேண்டினார். அப்போது சமாதியிலிருந்து, சரி என்று அவர் கூறியதை நான் கேட்டேன்.
நான் என் மனைவியிடம் சென்ற போது அவள் கன்னியாக இருந்தாள். ஐந்து மாதங்கள் அவளை நெருங்காமல் இருந்தேன். அப்போது ஸய்யித் அஹ்மத் பதவீ அவர்கள் (கப்ரிலிருந்து எழுந்து) வந்து என் மனைவியுடன் என்னைக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று தமது அடக்கத்தலத்தின் மேல் விரிப்பை விரித்தார். எனக்காக இனிப்புப் பதார்த்தங்கள் தயார் செய்தார். அதை உண்பதற்காக உயிருடன் உள்ளவர்களையும் இறந்தவர்களையும் அழைத்தார். இங்கே இவளது கன்னித்தன்மையை நீக்கு என்று கூறினார். அன்று தான் முதலிரவானது.
(தபகாத், பதவீயின் வரலாறு)
குறிப்பு: கப்ரிலிருந்து வந்து ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதெல்லாம் சாத்தியமா? என்பது ஒருபுறமிருக்கட்டும். அனைவர் முன்னிலையிலும் முதலிரவு நடத்தச் சொல்வது தான் அவ்லியாக்களின் வேலையா? இப்படி நடந்தவர் அவ்லியாவாக இருக்க முடியுமா? என்பதே கேள்வி!
இந்த அவ்லியா பக்தர்கள், கன்னி கழியாவிட்டால் இனி கப்ரஸ்தான் பக்கம் போக வேண்டியது தான். அவனவன் ஊட்டி, கொடைக்கானலில் தேனிலவு கொண்டாடுவான் என்றால் இந்தப் பரேலவிகளுக்கு கப்ருஸ்தானில் தான் தேனிலவு!
ஸய்யித் அல் அஜமீ.
இந்தப் பெரியாரின் பார்வை ஒரு நாயின் மீது பட்டது. உடனே எல்லா நாய்களும் அந்த நாய்க்கு அடிபணிந்தன. மக்கள் எல்லாம் தங்கள் தேவைகளை நிறைவேற்ற இந்த நாயிடம் விரைந்து வரலாயினர். அந்த நாய் நோயுற்ற போது அதனைச் சுற்றி எல்லா நாய்களும் அழுதன. அது இறந்ததும் மக்கள் அழுதனர். நாய்கள் ஊளையிட்டன. சிலரது உள்ளத்தில் அதை அடக்கம் செய்யுமாறு இறைவன் உதிப்பை ஏற்படுத்தினான். அவ்வாறு அடக்கம் செய்தார்கள். நாய்கள் யாவும் அந்த நாயின் கப்ரை ஸியாரத் செய்யலாயின. அந்த நாய்கள் மரணிக்கும் வரை இது நடந்தது. இந்தப் பெரியாரின் பார்வை இந்த நாயின் மேல் பட்டதால் இவ்வளவு மகிமை என்றால் அவரது பார்வை மனிதன் மேல் பட்டால்...?
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 62)
குறிப்பு: யானைக்கும், கழுதைக்கும் கப்ரு கட்டியுள்ளவர்களே! உங்கள் செயலுக்கும் இந்த அவ்லியாவின் வாழ்வில் ஆதாரம் இருக்கிறது.
நாய்களை யாரும் இனி அடிக்கக் கூடாது; நாய்களுக்கும் இனி மேல் தர்ஹாக்கள் கட்ட வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது என்று ஷேக் அப்துல்லாஹ் நடத்தும் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.
இந்தப் பெரியார் கல்வத்திலிருந்து வெளியே வந்தால் யார் மீது இவரது பார்வை படுகின்றதோ அவரது கண்கள் சொக்கத் தங்கமாக மாறி விடும்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 61)
குறிப்பு: கண்கள் தங்கமாக மாறி விட்டால் எப்படிப் பார்க்க முடியும்? என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். சுன்னத் ஜமாஅத் என்றால் இதை நம்பித் தான் ஆக வேண்டும்.
அப்துல்லாஹ் இப்னு அபீ ஹம்ஸா.
நான் நபி (ஸல்) அவர்களை விழிப்பிலேயே நேரில் சந்திக்கிறேன் என்று இவர் சொன்னார். வீட்டிலேயே முடங்கிக் கொண்டார். அவர் மரணிக்கும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் வெளி வருவதில்லை.
(தபகாத், பாகம்: 1, பக்கம்: 15)
குறிப்பு: சாகும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் இவர் வெளியே வர மாட்டாராம். ஐவேளை ஜமாஅத் தொழுகைக்குக் கூட வராதவன் எல்லாம் அவ்லியாவாம்.
நபி (ஸல்) அவர்களைக் கனவிலும், நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக என்று சில சு.ஜ. ஆலிம்கள் தங்கள் சொற்பொழிவுகளில் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களை விழிப்பில் ஒரு போதும் இந்த உலகத்தில் சந்திக்க முடியாது என்று தெரிந்தும் இவர்கள் இப்படிப் பிரார்த்திக்கிறார்கள் என்றால் இந்தப் பலான அவ்லியாக்களைப் பின்பற்றித் தான்.
ஷஃபான் அல் மஜ்தூப்.
இப்பெரியார் ஜும்ஆ நாட்களிலும் மற்ற நாட்களிலும் பள்ளியில் இருந்து கொண்டு குர்ஆனில் இல்லாத புதிய அத்தியாயங்களை ஓதுவார். அதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். பாமரன் அதுவும் குர்ஆன் தான் என்று எண்ணிக் கொள்வான். ஏனெனில் அவர் ஓதுவது குர்ஆன் போலவே இருக்கும்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)
மார்க்க அறிஞர்கள் வீடுகளுக்குச் சென்று குர்ஆன் ஓதுவது போல் இந்தப் பெரியார் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து ஓதினார். அவர் என்ன ஓதுகிறார் என்று செவிமடுத்தேன். வமாஅன்தும் ஃபீதஸ்தீகி ஹுதின் பிஸாதிகீன். வலகத் அர்ஸலல்லாஹுலனா கவ்மன். பில் முஃதபிகாதி யள்ரிபூனனா வயஃகுதூன அம்வாலனா மின் நாஸிரீன் என்று ஓதினார். (இது குர்ஆனில் இல்லாததாகும்.) இப்படி ஓதி விட்டு, இறைவா, கண்ணியமிக்க வேதத்திலிருந்து ஓதிய நன்மையை... என்று துஆச் செய்தார்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)
குறிப்பு: எள்ளளவு இறையச்சம் உள்ள எவரும் குர்ஆனுடன் எதையும் கலக்கத் துணிய மாட்டார். ஆனால் இந்த ஆளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று பாருங்கள்! இவருக்கும் பெயர் இறைநேசராம்!

இந்தப் பெரியார் முன்பகுதி, பின்பகுதியை மறைக்கும் விதமாகக் கோவணமே கட்டியிருப்பார்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)
குறிப்பு: ஆறேழு மீட்டர்களில் ஆள் மூழ்கிப் போகும் அளவுக்குத் துணியில் ஜிப்பாவும், குஞ்சான் வைத்த துருக்கி தொப்பியும் அணிய வேண்டிய அவசியம் இந்தப் பரேலவிகளுக்கு இல்லை. ஒட்டுக் கோவணத்தைக் கட்டிக் கொண்டு காசை மிச்சப்படுத்தலாம்.
இவை அவ்லியாக்களின் இலட்சணங்களில் சில பகுதிகளாகும். சுன்னத் வல்ஜமாஅத்தின் மிகப் பெரும் இமாமாக மதிக்கப்படும் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி அவர்களின் நூலில் காணப்படும் இந்த விஷயங்களைக் கவனிக்கும் போது, கடந்த காலங்களில் யாரெல்லாம் அவ்லியாக்களாக மதிக்கப்பட்டார்கள் என்பது விளங்க வரும்.
இந்த சுன்னத் ஜமாஅத்தினர், இந்த உயர்ந்த (?) பண்புடையவர்களை இன்றளவும் அவ்லியாக்கள் என்று நம்புகின்றனர். மவ்லிதுக் கிதாபுகளில் வரும் துஆக்களில் இவர்களின் பெயர்களும் பெருமையுடன் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் பொருட்டால் கேட்கப்படும் துஆக்களும் உள்ளன.
நியாய உணர்வும், சிந்திக்கும் திறனும், இஸ்லாத்தின் அடிப்படை பற்றி ஓரளவு அறிவும் இருக்கும் முஸ்லிம்களே! இந்தத் தன்மைகள் அவ்லியாக்களுடையது என்பதை நம்ப முடிகின்றதா? சிந்தியுங்கள். இப்படித் தான் நம்மை ஏமாற்றியுள்ளனர் இந்த முல்லாக்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.