மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்காக இந்தத் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாசகர்களும் குர் ஆன்,சுன்னாவை அடிப்படையாக வைத்து islamiyatheerppu@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் கட்டுரைகளை அனுப்ப முடியும் என்பதை அன்பாய்த் தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, April 30, 2011

தக்லீத் ஓர் ஆய்வு.(தொடர் 02)
முன்னோர்களை பின்பற்றுவதும் வழிகேடே !

எமது முதலாம்  தொடரில் ஸஹாபாக்களைப் பின்பற்றுவதுதான் நேர்வழி என்று சொல்பவர்கள் எப்படி தக்லீத் என்ற வலையில் சிக்குகிறார்கள் என்பதைப் பற்றி நோக்கினோம்.

இந்தத் தொடரில் முன்னோர்களை பின்பற்றுவதாக வாதிட்டு தக்லீத் செய்பவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

முன்னோர்களை பின்பற்றுவதும் தனிமனித வழிபாடுதான்.

இமாம்களைப் பின்பற்றுபவர்கள் சொல்லும் மற்றொரு வாதம் தான் முன்னோர்கள் சொன்னவைகள் மார்க்கமாகும் என்பது.

அதாவது நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார்களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார்களோ அந்த முறையில் தான் நாமும் வாழ வேண்டும் என்பது இவர்களின் வாதமாகும்.

எந்தப் பெரிய அறிஞனாக இருந்தாலும்,விஞ்ஞானியாக இருந்தாலும்,மிகப் பெரிய ஆய்வாளனாக இருந்தாலும் அனைவரையும் முட்டாலாக மாற்றும் ஒரு குருட்டு பக்திதான் இந்த முன்னோர்கள் வாதம்.

எந்தப் பெரிய கல்வியாளனையும் முன்னோர்கள் என்ற வாதம் ஒரு பக்தி வட்டத்திற்குள் கொண்டு வந்து விடும்.

ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இந்த குருட்டு பக்தியை துடைத்தெரிகிறது.
குர்ஆன் கூறும் செய்திகளைப் பாருங்கள்.

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?      (அல்குர்ஆன் 2:170)

மனிதனது அறிவுக்கும்இ சுயமரியாதை உணர்வுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்தக் குருட்டு பக்தி முஸ்லிம்களிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் இந்த வசனத்தில் கட்டளையிடுகின்றான். ஆயினும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிற மதத்தவரிடமிருந்து காப்பியடித்து இந்தப் போக்கைத் தமதாக்கிக் கொண்டனர்.

முன்னோர்களின் கொள்கைகள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தாலும், தெளிவாக அது சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட, "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அதையே நாங்களும் செய்கிறோம்'' எனக் கூறுகின்றனர்.

சமாதிகளில் வழிபாடு செய்வதும், ஷைகுமார்களின் கால்களில் விழுவதும், சந்தனக் கூடு, கொடியேற்றம் நடத்துவதும், கத்தம் பாத்திஹாக்களை சிரத்தையுடன் செய்து வருவதும், இது போன்ற இன்னும் பல காரியங்களும் மார்க்கத்தின் அம்சங்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் முன்னோர்களைப் பின்பற்றுவது தான்.

அல்லாஹ்வும்இ அவனது தூதரும் இவற்றைத் தடை செய்துள்ளனர் என்று யாரேனும் சுட்டிக் காட்டினால், "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது?'' என்பதே அவர்களின் பதிலாக இருக்கின்றது. இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான மறுப்பு அமைந்துள்ளது.

 இவர்களின் இந்தக் குருட்டு பக்திக்கான காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து நபித்தோழர்கள் மார்க்கத்தைக் கற்றனர். அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் கற்றனர். இப்படியே வாழையடி வாழையாகவே மார்க்கத்தை நாம் கற்று வருகிறோம். எனவே எங்கள் முன்னோர்கள் செய்தவை யாவும் நபி (ஸல்) அவர்களின் வழியாக வாழையடி வாழையாகவே வந்திருக்க முடியும் என்று இவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர்களும், அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினரும் வாழையடி வாழையாக இம்மார்க்கத்தைக் கற்றாலும் கூட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ செய்திருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை.

ஏசுவை இறைவனின் மகன் என்று ஒரு கூட்டத்தினர் நம்புகின்றனர். இந்தக் கொள்கை ஏசுவிடமிருந்து தங்களுக்கு வாழையடி வாழையாகக் கிடைத்தது என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். இறைவனுக்கு மகன் இல்லை என்று போதனை செய்த ஏசுவின் பெயரால் அவரது போதனைக்கு முரணான கொள்கை நடைமுறைக்கு வந்திருப்பது எதைக் காட்டுகிறது? வாழையடி வாழையாக முழுமையான போதனை வந்து  சேர முடியாது என்பதைக் காட்டவில்லையா?

இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கேற்பஇ இறைவனை வணங்குவதற்காக கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார்கள். அந்தக் கஅபாவுக்குள் அவர்களின் சந்ததியினரே 360 சிலைகளை வைத்து வழிபட்டது எதைக் காட்டுகிறது? முன்னோர்கள் முழு அளவுக்கு நம்பகமானவர்கள் அல்லர் என்பதைக் காட்டவில்லையா?

தங்கள் முன்னோர்கள் செய்த காரியங்கள் நபி (ஸல்) அவர்கள் வழியாகத் தான் வந்திருக்க முடியும் என்று இவர்கள் கூறுவது ஏற்கத்தக்கது என்றால், ஏசு இறைமகன் எனும் கோட்பாடு ஏசுவிடமிருந்து தான் வந்தது என்று கிறித்தவர்கள் கூறுவதை எப்படி மறுக்க முடியும்? உருவச் சிலைகள் வழிபாடு இப்ராஹீம் நபியின் மூலமாகவே வந்திருக்க முடியும் என்று மக்கத்து இறை மறுப்பாளர்கள் நம்பியதை எப்படித் தவறென்று கூற முடியும்?

நமது முன்னோர்கள் தாம் தொழுகை, நோன்பு போன்றவற்றைக் கூட மார்க்கம் என்று நமக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இந்த விஷயங்களில் முன்னோர்களை நாம் பின்பற்றவில்லையா? என்று சிலர் கேட்கலாம். முன்னோர்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்த வசனம் கூறவில்லை. அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் பின்பற்றுவது எப்படித் தவறானதோ அதே போன்று அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் புறக்கணிப்பதும் தவறானதாகும்.

"அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தால் கூட அவர்களைத் தான் பின்பற்றப் போகிறார்களா?'' என்று இறைவன் கேட்பதிலிருந்து இதை நாம் விளங்கலாம்.

முன்னோர்கள் சென்றது நேர்வழியாக இருந்தால் - அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியாக இருந்தால் - தாராளமாக அதை ஏற்கலாம். தொழுகைஇ நோன்பு போன்ற கடமைகள் இந்த வகையில் அமைந்துள்ளதாலேயே அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

முன்னோர்களைப் பின்பற்றக் கூடியவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இல்லை என்பதையும் நாம் உணர்த்த வேண்டியுள்ளது. முன்னோர்களைப் பின்பற்றுவோர் மார்க்க விஷயங்களில் மட்டுமே அவர்களைப் பின்பற்றுகின்றனர். உலக விஷயங்களில் யாருமே முன்னோர்களை பின்பற்றுவதில்லை.

முன்னோர்கள் நவீன வாகனங்களைக் கண்டதில்லை. மின் சாதனங்களைக் கண்டதில்லை. உறுதியான கட்டடங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்தியதில்லை என்பதற்காக அவர்களின் வழித் தோன்றல்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. முன்னோர்கள் வாழ்ந்திராத வாழ்க்கைக்கு இவர்கள் ஆசைப்படுகிறார்கள். தங்களுக்கு அதிக நன்மை தரக் கூடியது என்றால் முன்னோர்கள் செய்யாதவற்றைச் செய்கின்றனர். முன்னோர்கள் செய்தவற்றை விட்டு விடவும் செய்கின்றனர்.

உலக விஷயங்களில் முன்னோர்களைப் பின்பற்றுவதால் மிகப் பெரிய கேடு எதுவும் ஏற்படப் போவதில்லை. அற்பமான இந்த உலகத்தில் சிறிதளவு சிரமம் ஏற்படலாம், அவ்வளவு தான்!

ஆனால் மார்க்க விஷயத்தில் முன்னோர்களைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றினால் மறுமை வாழ்வே பாழாகி விடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.

"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள்.      (33:66, 67)

முன்னோர்கள், பெரியார்கள் மீது கொண்ட குருட்டு பக்தி நம்மை நரகத்தில் தள்ளி விடும் என்று இறைவன் எச்சரித்த பிறகு, உலக விஷயங்களை விட மார்க்க விஷயங்களில் அதிகக் கவனம் அவசியம் என்பதை உணர வேண்டாமா?

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைக் கூறியிருப்பது தெரிய வந்தால், முன்னோôர்களின் வழிமுறைக்கு அது மாற்றமாக இருந்தாலும் அல்லாஹ்வும்இ அவனது தூதரும் கூறியதையே எடுத்து நடக்க வேண்டும். மக்கத்துக் காஃபிர்கள் தங்களின் முன்னோர்களைக் காரணம் காட்டியது போல் காரணம் கூறக் கூடாது.

அல்லாஹ்வின் வேதத்தையும், அவனது தூதரின் போதனை களையும் புறக்கணிப்பதற்குக் காரணமாக உள்ள முன்னோர் பக்தியைத் தூக்கி எறியக் கூடியவர்களே இந்த வசனத்தை உணர்ந்து செயல்படுத்தியவர்களாவர். இந்த பக்தி அகன்று விடுமானால் சமுதாயத்தில் நிலவுகின்ற குழப்பங்களில் பெருமளவு நீங்கி விடும். 

ஆய்வு தொடரும்...................

எமது முதலாம் தொடர் ஆக்கத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்

Thursday, April 28, 2011

ஸஹாபாக்களைப் பின்பற்றுவதும் வழிகேடே
சில்மி என்ற சில்லரைக்கான பதில்  
பாகம் 01  

இந்தத் தொடரில் ஸஹாபாக்களைப் பின்பற்றுவதுதான் நேர்வழி என்று சொல்பவர்கள் எப்படி தக்லீத் என்ற வலையில் சிக்குகிறார்கள் என்பதைப் பற்றி நோக்குவோம்.


தவ்ஹீத் வாதிகள் என்று சொல்லிக் கொண்டு,இமாம்களைப் பின்பற்றுவது வழிகேடு என்று சொன்னவர்கள்,தற்போது ஸஹாபாக்களைப் பின்பற்றலாம்,அது நேர்வழி என்று பிரச்சாரம் செய்யும் காட்சி அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது. 

அந்தப் பிரச்சாரத்தின் உண்மை நிலை என்ன? ஸஹாபாக்களை பின்பற்றலாமா? பின்பற்றக் கூடாது என்றால் அதற்கான ஆதாரம் என்ன? என்பது போன்ற விஷயங்களை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஸஹாபாக்களை பின்பற்றுபவர்களின் வகைகள் :

ஸஹாபாக்களை பின்பற்றுபவர்கள் இரண்டு வகையினராக இருக்கிறார்கள்.

முதல் வகை : 

ஸஹாபாக்கள் சொல்வதும் மார்க்கத்தின் ஆதாரமாகும்,அவர்கள் சொல்வதை ஏற்று நடப்பது நமது கடமை.என்று வாதிடுபவர்கள்.

இரண்டாவது வகை :

ஸஹாபாக்களை பின்பற்றுவதென்றால் அவர்கள் எப்படி குர்ஆனையும் ஹதீஸையும் விளங்கினார்களோ அப்படியே நாமும் விளங்குவது,மார்க்கத்தின் சட்டம் ஒன்றை சொல்வதற்கு முன்னால் ஸஹாபாக்கள் குறிப்பிட்ட சட்டத்தை எப்படி விளங்கிக் கொண்டார்கள் என்று பார்க்க வேண்டும் என வாதிடுபவர்கள்.

மொத்தத்தில் இந்த இரண்டு வகையான கருத்தைக் கொண்டவர்களும் வழிகேட்டில் தான் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கம் என்பது திருமறைக் குர்ஆனையும்,நபியவர்களின் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

இந்த இரண்டைத் தவிர வேறு எதையும் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொள்ள கூடாது.

குர்ஆனையும்,ஹதீஸையும் பின்பற்றுபவர்களைப் பொருத்தவரையில் வாழ்க்கைக்கான வழி காட்டி அந்த இரண்டிலும் இருந்தால் போதும் அதைத் தவிர்த்து யார் எதைச் சொன்னாலும் அது நமக்கு தேவையற்றது.

இப்போது ஸஹாபாக்களை பின்பற்ற முடியுமா?

பின்பற்றுவதினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!    
(அல்குர்ஆன் 7:3)

மேற்கண்ட திருமறை வசனத்தில் இறைவனின் மூலம் நமக்கு வந்த வஹியை மாத்திரம் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்றும் அது தவிர்ந்த எந்த ஒன்றையும் பின்பற்றக் கூடாது என்றும் இறைவன் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

இறைவனிடமிருந்து வரும் வஹீ ஒன்று திருமறைக் குர்ஆன் மற்றயது நபியவர்களின் வார்த்தை. இந்த இரண்டையும் தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர வேறு எதனையும் பின்பற்றக் கூடாது.

ஆனால் வஹீ என்ற வட்;டத்தைப் பற்றி பேசுபவர்கள் ஸஹாபாக்கள் சொன்ன,செய்த,அங்கீகரித்தவைகளையும் மார்க்கம் என்று வாதிடுகிறார்கள்.இப்படி வாதிடுபவர்கள் மறைமுகமாக ஸஹாபாக்களுக்கும் இறைவனிடமிருந்து வஹீ வருகிறது என்றே நம்புகிறார்கள் என்று தான் அர்த்தம்.

ஸஹாபாக்களுக்கு வஹீ வராது என்றும் இறைவனின் தூதருக்கு மாத்திரம் தான் வஹீ வரும் என்றும் வஹீயை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்றும் இறைவன் திருமறையில் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 2:38)

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!
(அல்குர்ஆன் 6:106)

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது 'செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!' என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை. (அல்குர்ஆன் 24:54)

'நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 8:46)

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன் 6:153)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (அல்குர்ஆன் 4:59)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)

எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)

மேட்கண்ட வசனங்கள் யாவும் இறைவனின் வார்த்தைகளையும் நபியவர்களின் நடை முறையையும் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.

இதே நேரம் ஸஹாபாக்களை பின்பற்றுவதும் மார்க்கம் என்று சொல்பவர்கள் ஸஹாபாக்களை தக்லீத் செய்வதன் மூலம் தெளிவான வழி கேட்டில் இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆய்வு தொடரும்...................


 

Tuesday, April 26, 2011

பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா? ஒரு வாசகரின் கேள்விக்கு பதில்!


பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா?…உங்கள் சஞ்சிகையில் இடம் பெறும் அதிகமான ஆக்கங்கள் இன்னொருவரை அல்லது இயக்கத்தை குத்திக்காட்டும் விதமாகவும்காயப்படுத்தும் விதமாகவும் எழுதப்பட்டுள்ளது. பல பிரபலமான தாஈக்களை தரம் குறைத்து மதிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அவர்களால் செய்யப்படும் சேவைகளை மறைத்து சில கருத்து முரண்பாடுகளுக்காய் அவர்களை மிக மோசமாக வர்ணித்து எழுதப்பட்டுள்ளது. அதிலும் பெயர் குறிப்பிட்டு விமர்சனங்களை எழுதியிருப்பது ஒரு தரக்குறைவான செயலல்லவாகருத்து முரண்பாடுகள் இருக்கிறது என்பதற்காக யாரையும் காரசாரமாக விமர்சித்து எழுதுவதோ,வழிகேடர்கள் போல் சித்தரிப்பதோ நல்லதோர் விடயமல்லவேபின்த் அப்தில் காதர் மள்வானை
தர்கா வழிபாடு என்றும்சந்தனக்கூடு என்றும்கொடி மரம் என்றும்தட்டு – தகடு என்றும் ஷிர்க்கில் மூழ்கிப்போயுள்ளவர்களையும்பாங்குக்கு முன் ஸலவாத்துமிஃராஜ் பராஅத் நோன்புதஸ்பீஹ் தொழுகை என்று பித்அத்தில் சங்கமித்தவர்களையும்வரதட்சணைவட்டிமது என்று பகிரங்கமாக பெரும் பாவங்களில் ஈடுபடுவோரையும்ஜின் வசிய்யத்துமந்திரம்தந்திரம் என்ற போர்வையில் சமூகத்தை ஏய்த்துப் பிழைப்போரையும்மத்ஹபு மாயையில் சிக்குண்டு சமூகத்தையும்சன்மார்க்கத்தையும் துண்டாடும் போலி உலமாக்களையும்ஆட்சி – அதிகாரம்,சமூக ஒற்றுமை என்ற கோஷங்களுக்குப் பின் மறைந்து கொண்டு குர்ஆன் _ன்னாவுக்கு எதிரானக் கருத்துக்களை விதைத்துகுராபிகளுக்கு கூஜா தூக்கும் ஜமாஅத்துக்களையும் நாம் விமர்சிக்கும் போதுஇப்படியெல்லாம் பண்பாடற்று விமர்சிப்பது தவறு: இது கேட்போர் மனதை புண்படுத்துவதோடுதொடர்ந்தும் சத்தியத்தை கேட்காமல் இருப்பதற்கே வழிவகுக்கும் என்று கூறிமேற்சொன்ன குற்றங்களை நியாயப்படுத்தும் இயக்கங்களையும்அதன் தாஈக்களையும்,அக்கருத்தால் கவரப்பட்டவர்களையும் தஃவாக்களத்தில் பரவலாகக் காண முடிகிறது.
இதன் ஓர் வெளிப்பாடாகவே மேற்குறித்த விமர்சனமும் அமைந்துள்ளது.இங்கு யாரெல்லாம் பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்களோ அவர்களே தம் பேச்சுக்களிலும்எழுத்துக்களிலும் பலரின் பெயர்களை பச்சையாய் குறிப்பிட்டு விமர்சிக்கத் தான் செய்கிறார்கள். ஸல்மான் ருஷ்திதஸ்லீமா நஸ்ரின்ஜோர்ஜ் புஸ்டோனி பிளேயர்_ஸ்னி முபாரக்முஅம்மர் கடாபிஅப்துல்லாஹ்… இன்னும் இது போன்ற பலரை விமர்சிக்கக் கூடாது என்பவர்கள் கடுமையாகவும்காரமாகவும் விமர்சிப்பதை அன்றாடம் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்லப் போனால்யாரை இவர்கள் இலக்கு வைத்து இவ்விமர்சனத்தை புரிகிறார்களோ அந்தப் Pது யின் பெயரை குறிப்பிட்டே தமது பத்திரிகைகளில் இவர்கள் விமர்சித்தும் வருகிறார்கள். இவர்களின் இவ்விமர்சனம் நியாயபூர்வமானது கிடையாது என்பதற்கு இவர்களே தக்க சான்றாகவும் உள்ளனர்.
விமர்சனம் என்று வருகின்ற போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்கள் உள்ளன. முதலில் விமர்சனத்தில் எது அனுமதிக்கப் பட்டதுஎது தடை செய்யப்பட்டதுஎன்பதனை ஒவ்வொருவரும் சரியாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
விமர்சனம் இருவகைப்படும்:
1. தனி மனிதன் சமூகத்தை பாதிக்காத விதத்தில் புரியும் தனிப்பட்ட தவறுகள் சம்பந்தப்பட்டவை.
2. தனி மனிதன் சமூகத்தை பாதிக்கும் விதத்தில் புரியும் தவறுகள் சம்பந்தப்பட்டவை.இதில் சமூகத்தை எவ்விதத்திலும் பாதிக்காததவறிழைக்கும் மனிதனும் அல்லாஹ்வும் மாத்திரம் சம்பந்தப்பட்ட தவறுகள்பாவங்களைப் பொறுத்த மட்டில் அவற்றை பெயர் குறிப்பிட்டுஎழுத்து மூலமோபேச்சு மூலமோ விமர்சிப்பது கூடாது. கூடாது என்பதை விட அவற்றை நாளு பேருக்கு தெரியாதவாறு மறைக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது.
ஆனால்ஒரு தனிமனிதன் விடக்கூடிய தவறு அதிலும் குறிப்பாக மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயத்தில் ஒருவர் விடும் தவறு ஒரு சமூகத்தை பாதிக்கும் விதமாய் அமையுமாயின்அத்தவறை தயங்காது தட்டிக் கேட்பதும்சுட்டிக் காட்டுவதும் அது குறித்து மக்களை விழிப்புறச் செய்யும் விதமாய் விமர்சிப்பதும் ஒரு முஸ்லிமின் கடமை.
கடமை என்பதை விட அது தான் மார்க்கம்.சகோதரி ஆதங்கப் படும் அளவுக்கு நாம் எதை விமர்சித்தோம்எதற்காக விமர்சித்தோம்உங்கள் பார்வையில் அற்பமாகக் கருதப்படும் கருத்து முரண்பாடுகளுக்காகவாஅல்லது அகீதாவுக்கே ஆப்பு வைக்கும் அபத்தங்களுக்காகவா?ஹதீஸை புரியும் இஜ்திஹாதில் ஏற்பட்ட தவறுக்காகவாஹதீஸையே மறுதலிக்கும் மடைமைக்காகவா?
நமது இதழில் யூஸ_புல் கர்ளாவிஅஷ்ஷெய்க் அகார் முஹம்மது(நளீமி)அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன்(நளீமி)மவ்லானா மவ்தூதிமவ்லானா ஜகரிய்யா ஸாஹிப்… இவர்கள் போன்ற பலரை நாம் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சித்துள்ளோம். இன்ஷா அல்லாஹ்இனிமேலும் விமர்சிப்போம். இவர்கள் குறித்த எமது விமர்சனம் எந்த அடிப்படையில் அமைந்திருந்தது?உதாரணத்திற்குயூஸ_ப் அல் கர்ளாவி கஞ்சா அடித்தார்;, வட்டி வாங்கினார்தனிமையில் சினிமா பார்த்தார் என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்வோடு சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விடயங்களை விமர்சித்தோமாஅல்லது ‘அல்கஹோலை குறைந்தளவில் பருகினால் அது குற்றமல்ல’, ‘சிறிய வட்டி ஹலால்’, ‘பெண்கள் சினிமாவில் நடிப்பது கூடும்’, ‘மீலாது விழா கொண்டாடலாம்’ போன்ற அல்குர்ஆனுக்கும் ஸ_ன்னாவுக்கும் முரணாக இவரால் வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்புகளை அல்குர்ஆன் ஸ_ன்னா அடிப்படையில் தவறு என்று விமர்சித்தோமா?
ஒருவர் முன்வைக்கும் கருத்து அல்லது கொள்கை தவறானது என்று உறுதியாகத் தெரிந்தால்,அதை மக்கள் சரிகண்டு அதன் வழியில் சென்று வழிகேட்டில் வீழ்ந்து விடாமல் அவர்களை தடுப்பதாக இருந்தால்அக்கொள்கையின் விபரீதத்தை மக்களுக்கு விளங்கப் படுத்தும் விதமாய் விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வழி தான் இருக்க முடியும்?
இதைக்கூட நாமாகக் கற்பனை செய்து கூற வில்லை. திருக்குர்ஆனும் நபி மொழிகளும் மக்களை ஏமாற்ற முனையும் பேர்வழிகளை விமர்சிப்பதன் மூலம் அவர்களின் முகத்திரையை கிழிக்குமாறு எம்மை பணிக்கின்றது. இதற்கான சான்றுகள் இதோ: நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்துதங்களைச் சேர்ந்த ஓர் ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்து விட்டதாகக் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கல்லெறிந்து கொல்லுதல் பற்றி தவ்ராதில் கூறப்பட்டுள்ளது என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் ‘அவர்களுக்கு கசையடி கொடுத்து இழிவு படுத்துவோம்’ என்று விடையளித்தனர். அப்போதுஅப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் யூதர்களை நோக்கி ‘நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள். தவ்ராதில் கல்லெறிந்து கொல்லுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது’ என்றார். உடனே அவர்கள் தவ்ராதை எடுத்து வந்தனர். அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்வது சம்பந்தமான வசனத்தைக் கையால் மறைத்துக் கொண்டுஅதற்கு முன் பின் வசனங்களை படித்தார். ‘கையை எடுப்பீராக!’ என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறியதும் அங்கே அந்த வசனம் காணப்பட்டது என்ற செய்தி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
அவர்கள் புண்படுவார்களே என்று எண்ணி அவர்களின் தவறை சுட்டிக்காட்ட நபித்தோழர் தயங்க வில்லை. நபியவர்களும் அதை அங்கீகரித்தார்கள்.தங்கள் கைகளால் புத்தகத்தை எழுதிக் கொண்டுஇது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறியோருக்குக் கேடு உண்டாகட்டும்’ (2:79)என்று இறைவன் கூறுகிறான். அவர்கள் வேதத்தில் சுயமாகச் சேர்த்துக் கொண்டவைகளை இங்கே இறைவன் விமர்சனம் செய்கிறான்.இன்ஜீல் என்பது ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டு,அவர்கள் மக்களுக்குப் போதித்த தாகும் (5:110). ஈஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால் எழுதப்பட்டவற்றை இன்ஜீல் என்று கூறிமக்களை ஏமாற்றும் போக்கை விமர்சனம் செய்வது தவறா?
ஒட்டகம் உண்பதைத் தங்களுக்கு இறைவன் ஹராமாக்கியதாக யூதர்கள் பொய் கூறிய போது,தவ்ராத்தைக் கொண்டு வந்துஅதை நிரூபியுங்கள் (3:93) என்று நபியவர்களை சவால் விடச் செய்தது பிழையா?வேதத்திற்கு தவறான விளக்கம் கூறி ஏமாற்றி வந்ததையும் இறைவன் கண்டிக்கத்தவற வில்லை (3:78). நபியவர்கள் பற்றிய முன்னறிவிப்பைத் திட்டமிட்டு அவர்கள் மறைத்து வந்ததையும் இறைவன் அடையாளம் காட்டாமல் விடவில்லை (2:146). வேதத்தில் நீங்கள் மறைத்து வைத்த அனேக வசனங்களை அம்பலப்படுத்தவே நமது தூதர் உங்களிடம் வந்துள்ளார் (5:15) என்று கூறிஅவர்களை விமர்சனம் செய்யும் நோக்கத்திற்காகவே நபி (ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டதாக இறைவன் பிரகடனம் செய்கின்றான். இப்றாஹீம் (அலை) அவர்கள்யூத மார்க்கத்தவராக இருந்தார்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த போதுஇப்றாஹீம் காலத்தில் தவ்றாத் அருளப்பட வில்லையே! அவருக்குப் பின்னர் தானே தவ்ராத் அருளப்பட்டது (3:67) என்று மறுப்புக் கூறிஅவர்களை இறைவன் வாயடைக்கச் செய்தான்.
மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஒருவர் தவறு விடும் போது அல்லது சத்தியத்தை மறைக்கும் போது அதனை வன்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கான சான்றுகளாகும்.பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறாஒரு தவறை சுட்டிக் காட்டும் போது,தவறிழைத்தவனுக்கு தான் செய்வது தவறு தான் என்று விளங்கும் விதத்திலும்இது எனக்குத் தான் சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும்உள்ளத்தை உசுப்பும் விதத்திலும் மழுப்பலோமறைத்தலோசுற்றி வளைப்போ இன்றி சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இது எப்போது சாத்தியம்பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கும் போதே. இதையும் கூட நாமாகக் கூற வில்லை. யூத கிறிஸ்தவர்கள் (2:120), இஸ்ரவேலர்கள் (2:79), மஜூஸிகள் (22:17),முனாபிக்குகள் (2:8, 4:108), ஏன் ரஸ_லுல்லாஹ் (80:1-10, 3:128, 66:1), கூட தவறிழைக்கும் ஒவ்வொரு கணமும் அல்லாஹ்வால் சுட்டிக்காட்டப் பட்டு விமர்சிக்கப்பட்டது இவர்களுக்கு தெரியாதா?தவறுகளை விமர்சிக்கும் போது அதைச் சொன்னவரையும் அதைப்பின்பற்றும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சிக்க வேண்டும். இதுவும் அல் குர்ஆனின் வழி முறை தான். ஆது கூட்டம் (7:71), ஸமூது கூட்டம் (27:47), யானைப்படை (105:1), யஃஜூஜ் மஃஜூஜ் (18:94), அபூ லஹப் (111:1-3), இரம் (89:7), காரூன் (28:76), ஆஸர் (6:74), ஃபிர்அவ்ன் (2:49), சாமிரி (20:85),ஜாலூத் (2:249) ஆகியோர் அல்லாஹ்வால் விமர்சிக்கப்பட்டதும் இந்த அடிப்படையில் தான்.
இது போல்இன்னும் அனேக இடங்களில் வேதமுடையவர்களையும் பல தெய்வக் கொள்கையுடையோரையும் விமர்சனம் செய்துள்ளான். ‘வேத முடையோரே!’ என்று பல இடங்களில் அவர்களை அழைத்துஅவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் உள்ளான். பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறுதான் என்றால் ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களின் குறைகளை அக்குவேர் ஆணிவேராக விமர்சிக்கும் ‘இல்முல் ஜரஹ் வத்தஃதீல்’ எனும் கலையை இவர்கள் பண்பாடற்ற கலை என்று கூறத்துணிவார்களாஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்ட நபித்தோழர் ஸகாத் பணத்துடன் இணைத்து வழங்கப்பட்ட அன்பளிப்பை ‘இது எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது’ என்று கூறியதைக் கேட்ட நபிகளார்முகம் சிவந்தவராய் மிம்பரில் ஏறிஅனைத்து தோழர்களையும் ஒன்று கூட்டி ‘இவர் தனது தாயின் வீட்டில் இருந்திருந்தால் இது இவருக்குக் கிடைத்திருக்குமா?’ என்று கடிந்து கொண்டு அனைவர் முன்னிலையிலும் ஒரு நபித்தோழரை நபிகளார் விமர்சித்ததையும் பண்பாடற்ற விமர்சனம் என்று குறை காணப்போகிறார்களா?காரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பது அல் குர்ஆனுக்கு முரணாநாம் எமது பேச்சுகளிலும்எழுத்துகளிலும் தவறிழைப்பவரை விமர்சிப்பதில் உள்ள கடுமையை விட,காரத்தை விட அல்லாஹ் தவறிழைப்பவர்களை விமர்சிப்பதற்காக பிரயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் மிகுந்த கடுமையும் காரமும் மிக்கதாக உள்ளது.
அல் குர்ஆனின் வசனங்களை ஏற்க மறுப்பவனைஅதன் போதனைகளை மறுப்பவனை விமர்சிக்கும் போது “அவனுக்குறிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது.” (7:176) ‘நாய்’ என்று விமர்சிக்கிறான்.
இஸ்லாத்தை கற்பதற்கு முன்வராத அறிவிலிகளை விமர்சிக்கும் போது “அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால் நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள்.” (7:179)
கால் நடைகள்’ என்கிறான்.வேதத்தைக் கற்று அதன் படி ஒழுகாதவர்களை விமர்சிக்கும் போதுதவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.” (62:5) ‘கழுதை’ என்று பொறிந்து தள்ளுகிறான்
.அல் குர்ஆன்அஸ் ஸ_ன்னா ஒன்றை சொல்லும் போது அதனை புறக்கணித்துஅதற்கு மாற்றமாக நடப்பவர்களை விமர்சிக்கும் போது “அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.” (74:50-51) ‘கழுதை’ என்று காட்டமாக விமர்சிப்பதைப் பார்க்கிறோம்.நாங்கள் விமர்சித்தது தவறு என்றால்எங்கள் வார்த்தை கடுமையானது என்றால்இவ்வாறு விமர்சிப்பது பண்பாடற்ற வழிமுறை என்றால்இவர்கள் முதலில் இவ்விமர்சனத்தைச் செய்த அல்லாஹ்வையும்அதனை அப்படியே ஏற்றுஅவ்விமர்சன வார்த்தைகளை அந்தத் தவறுகளை செய்த மக்களின் முகத்துக்கு முன் அப்படியே ஓதிக்காட்டிய நபிகள் நாயகத்தையும் நோக்கித் தான் தங்கள் சுட்டு விரலை முதலில் நீட்ட வேண்டும்.

Sunday, April 24, 2011

விடிவெள்ளி பத்திகை கட்டுரைக்கான மறுப்பு

கடந்த வார விடிவெள்ளி பத்திரிகையில் எஸ்.எச்.எம். ரிஸ்வி(LLB) அவர்களின் பிரான்சில் புர்கா தடை சட்டம் தொடர்பாக 
”பிரான்ஸ் புர்கா தடை;துவேசத்தின் வெளிப்பாடா” எனும் கட்டுரை வெளியிடப்பட்டது.

இந்த கட்டுரையில் சில நல்ல கருத்துக்கள் இருந்தாலும் சில தவரான சிந்தனைகளும் தினிக்கப்பட்டுள்ள்து .

பிரான்சின் புர்கா தடை சட்டம் ஐரோப்பாவில் இஸ்லாதின் வழர்ச்சியை முடக்க மேற்கொள்ளும் சதி முயற்சி என வர்னிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் புர்கா தடை சட்டம் பற்றி நாம் ஒரு தெளிவான அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். 
இல்லை எனில் சில தவரான கருத்துக்கலால் நாம் உந்தப்பட்டு தவரான பாதைக்கு நாம் செல்ல நேரிடலாம். 

பிரான்சின் புர்கா தடை சட்டம் பற்றி இப்பொழுது தெளிவாக நாம் அறிந்து கொள்வொம் 

பிரான்ஸ் ஹிஜாபை தடை செய்யவில்லை.
முஸ்லீம்கள் புரிய வேண்டிய சரியான கோணம்.

கடந்த சில நாட்களாக முஸ்லீம்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்றாக ஹிஜாபும் மாறியிருக்கிறது. பிரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டுப் பெண்கள் அணியும் ஆடையில் சில வகையான ஆடைகளை தடை செய்ததே இதற்கான காரணமாகும்.

கடந்த ஏப்ரல் 11 திங்கட்கிழமை அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தினால் பிரான்ஸில் சில இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டது.

பெரும்பாலான முஸ்லீம்கள் பிரான்ஸ் அரசு தடை செய்த ஆடை எது அவா்கள் தடை செய்யது மார்க்க அடிப்படையில் நியாமானதா? இல்லையா என்பதை சரியாக அறியாமல் இருக்கிறார்கள். 

இன்னும் சிலரோ பெண்கள் அணியும் ஹிஜாபையே பிரான்ஸ் தடை செய்துவிட்டதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலாவதாக பிரான்ஸ் அரசு எந்த வகையிலான ஆடைகளை பெண்களுக்கு தடை செய்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் மார்க்கத்தின் தெளிவை சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

பிரான் ஹிஜாபை தடை செய்ததா?

பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் அணியும் முகத்திரை பற்றி மாத்திரம் தான் தடை உத்தரவைப் பிரப்பித்துள்ளது. அது தவிர பெண்களின் ஹிஜாபுக்கு முழு உடலையும் மறைப்பதற்கு பிரான்ஸ் தடை விதிக்கவே இல்லை. தடை விதிக்கவும் முடியாது.

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. ஆடைகளைக் குறைக்கவும், உடலை மறைக்கவும் ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு உரிமை உள்ளது. பிரான்ஸிலும் இந்த உரிமை உண்டு. மக்களுக்கு உரிமை வழங்கப்படாத சர்வாதிகார நாடுகளில் தான் இது சாத்தியமாகும்.

முகம் மற்றும் முன் கை தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது.

பெண்கள் முகத்திரை அணிந்து கொண்டு செல்வதையே பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளது. பெண்கள் உடலை மறைப்பதை பிரான்ஸ் தடை செய்யவில்லை.

ஹிஜாபின் வகையும், பிரான்ஸின் தடையும்.


பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்.

பிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோ, பெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால், அவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

அதே சம‌யம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள், வழிபாட்டு தல‌ங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண‌ சோதனை செய்யப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக‌ நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிர, முகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் பிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக‌ (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார்.

தடை செய்யப்பட்ட முகத்திரை வடிவங்கள்.

பெண்கள் அணியும் ஹிஜாபில் நான்கு வகையான முறைகள் உலகலவில் பின்பற்றப்படுகின்றன அவை ஹிஜாப், நிகாப், சடோர், புர்கா என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹிஜாப் : முகத்தை மறைக்காமல் காதுதலைமுடி மற்றும் கழுதை மறைப்பதே  இந்த வகையை சேரும்.இந்த முறை தான் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.

நிகாப் : உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் மெல்லிய துணியை பயன்படுத்துவதையே நிகாப் என்கின்றனர்.இது அரபு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் நடை முறையில் உள்ளது.

சாடோர் : இந்த வகை ஈரான் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.படத்தை பார்த்து இதன் வடிவமைப்பை தெரிந்துக்கொள்ளுங்கள்.

புர்கா : இந்த முழு அளவிலான ஆடை ஆப்கானிஸ்தான் பகுதியிலும் இந்தியாவில் சில பகுதியிலும் அதிகமாக நடைமுறையில் உள்ளது.உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் வலைகளை கொண்டிருக்கும் வகையே புர்கா எனப் படுகிறது


.மேற்கண்ட முறைகளில் நிகாப் மற்றும் புர்கா வகையையே ஃபிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது.முகத்தை மறைத்து தங்களுடைய அடையாளத்தை மறைப்பதினாலேயே இந்த வகை முகத்திரைக்கு பிரான்ஸ் அரசு தடைவிதித்துள்ளது.
தங்கள் முகம் மற்றவர்களுக்கு தெரியாத விதத்தில் முகத்தில் திரையிட்டு மறைப்பதையே பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளதே தவிர முழுமையாக ஹிஜாப் அணிவதையே தடை செய்யவில்லை.

பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயக் கடமையா?

சில முஸ்லீம்கள் பிரான்ஸ் அரசு பெண்கள் முகத்திரையை போட்டுக்கொள்வதைத் தடை செய்துள்ளதினால் பிரான்சுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதுடன், பிரான்ஸ் அரசு இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதாகவும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் இஸ்லாம் பெண்கள் தங்கள் உடலை மறைக்க வேண்டும் என்றுதான் கட்டளையிடுகிறதே தவிர எந்த இடத்திலும் பெண்கள் முகத்திரை அணிந்து முகத்தை மறைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

எந்தப் பெண்ணாவது தனது சுயவிருப்பத்தின் பேரில் முகத்திரை அணிந்தால் அதை இஸ்லாம் தடுக்கவும் இல்லை. ஆனால் முகத்திரையை பெண்கள் அணிவது கட்டாயக் கடமை என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது.

இஸ்லாம் கட்டாயப்படுத்தாத ஒரு ஆடை முறையைத்தான் பிரான்ஸ் அரசும் தடை செய்துள்ளது. தனது தடைக்கான காரணமாக பாதுகாப்புப் பிரச்சினையைத்தான் பிரான்ஸ் முன்வைக்கிறது. முகத்தை மறைப்பதன் மூலம் குறிப்பிட்ட நபர் பெண்ணா அல்லது ஆணா என்று சரியாக அடையாளம் காண முடியாமல் இருப்பதினாலேயே இந்தச் சட்டத்தை பிரான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ற பல நாடுகளிலும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைப்பதை சாட்டாக வைத்துக் கொண்டு பலரும் பல தவறான காரியங்களுக்கும் இந்த முகத்திரையைப் பயண்படுத்துகிறார்கள்.
இஸ்லாம் கட்டாயப்படுத்தாத மக்ககளாக கட்டாயமாக்கிக் கொண்ட இந்தப் பழக்கத்தினால் முஸ்லிம் சமுதாயத்துக்கு அதிகமதிகம் கேடுகள் ஏற்படுவதை பெரு நகரங்களில் வசிப்பவர்கள் அனுபவப்பூர்வமாக உணரலாம்.

பொதுவாக தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற காரணத்துக்காகவே மனிதன் ஒழுக்கமாக வாழ்கிறான். (இறையச்சத்துடன் உள்ளவர்கள் விதிவிலக்கு)

தான் யார் என்று தெரியாவிட்டால் எந்தத் தவறு செய்வதற்கும் அது துணிவை அளித்து விடுகிறது. இது தான் எதார்த்தமான உண்மை. சொந்த ஊரில் நல்லவனாக இருப்பவன் தன்னை யாரும் அறிந்து கொள்ள முடியாத ஊரில் தவறுகள் செய்வதற்கும் அல்லது தவறுகள் செய்வதற்காக வெளியூர் செல்வதற்கும் இதுவே காரணம்.

இந்திய அளவில் சென்னை, மும்மை, கல்கத்தா போன்ற நகரங்களில் கல்லூரி மாணவிகளில் பலர் முகத்தை மறைத்துக் கொண்டு செய்யும் அநியாயம் கொஞ்சமல்ல.

முஸ்லிமல்லாத பெண்களும் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும் போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். சென்னை கிழக்குக் கடற்கரை போன்ற இடங்களைப் போய் பாத்தால் இப்படி சுற்றும் பலரைக் காணலாம் ஆனால் இப்படி அலையும் இளவட்டங்களில் சரிபாதிப் பேருக்கும் மேல் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.

அது போல் வேசித் தொழில் செய்யும் முஸ்லிமல்லாத பெண்களும் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக முகத்திரை அணிந்து ஆண்களுக்கு வலை வீசுவதை நாம் காணலாம்.

பல சந்தர்பங்களில் விபச்சாரக் குற்றச் சாட்டுக்களில் சிக்கிய சினிமா நடிகைகள் கூட முகத்திரை அணிந்து கொண்டு நீதி மன்றங்களுக்கு வந்த வரலாறுகள் அதிகம்.

சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட முகத்திரை அணிந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதை நாம் காண முடிகிறது.

பிரான்ஸில் வாழும் அணைத்து முஸ்லீம்களும் அரசுக்கு எதிராகப் போராடுகிறார்களா?

பெண்கள் முகத்தை மறைக்கும் நிகாப் மற்றும் புர்கா வகை ஆடைக்கு எதிராக பிரான்ஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தை பிரான்ஸில் வாழும் அனைத்து முஸ்லீம்களும் எதிர்க்கவில்லை.

முகத்தை பெண்கள் கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்ற தவறான கொள்கை உடைய சிலர் மாத்திரம் தான் இதனை எதிர்க்கிறார்கள் என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும்.

சுருக்கமாக நாம் தெரிய வேண்டியது.

பெண்கள் முகத்தை மறைப்பதென்பது அவர்களுடைய சுயவிருப்பதில் உள்ளதுதானே ஒழிய மார்க்கம் பெண்கள் முகத்தை மறைத்துத்தான் ஆக வேண்டும் என்று எங்கும் கட்டளை பிறப்பிக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் முகத்தைத் திறந்து கொள்வதற்கு மிகத் தெளிவான அனுமதியை இஸ்லாம் வழங்கியிருக்கும் போது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்குப் பிரச்சினையாக இருக்கிறது என்பதற்காக பெண்கள் முகத்திரை அணிவதை ஒரு நாடு தடை செய்தால் அதை எதிர்ப்பதற்கோ அல்லது குறிப்பிட்ட சட்டம் இஸ்லாத்தையே கொச்சைப்படுத்துகிறது என்று சொல்வதற்கே எந்த முகாந்திரமும் இல்லை.