மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்காக இந்தத் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாசகர்களும் குர் ஆன்,சுன்னாவை அடிப்படையாக வைத்து islamiyatheerppu@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் கட்டுரைகளை அனுப்ப முடியும் என்பதை அன்பாய்த் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, May 20, 2011

இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமீர் (?) ஹஜ்ஜுல் அக்பரிடம் சில கேள்விகள்.

உஸ்தாத்(?) ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே !

கடந்த ஏப்ரல் மாத அல்ஹஸனாத்தில் தஃவாக் களம் பகுதியில் குர்ஆன்,ஸ{ன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தீர்கள், அந்தக் கட்டுரையில் குர்ஆன் சுன்னாவை மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.


மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசுவதென்றால் சிலைகள் கூடாது என்று சொல்லக் கூடாது அப்படித்தானே? ஏன் என்றால் சிலையை வணங்குபவனின் மனம் புன்பட்டுவிடும் பாவம்.

அதே போல் தர்காக்களை வணங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யக் கூடாது. (நீங்கள் தர்காக்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனி விஷயம்) ஏன் என்றால் தரிக்கா வாதிகளின் மனதுகள் புன்படும் அப்படித்தானே?

விபச்சாரம் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்யப் கூடாது ஏன் என்றால் விபச்சாரம் செய்பவனின் மனது புன்பட்டுவிடும் அப்படித் தானே?

இப்படி அடுத்தவர்களின் மனது புன்பட்டுவிடாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டுக்குள் வந்தால் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் இலச்சனம் உங்களைப் போல் ஷீயா மதத் தலைவர்களுடன் தான் கைகோர்க்க வேண்டிவரும் (பெப்ரவரி மாத அழைப்பில் ஷீயா மதத் தலைவருடன் தாங்கள் நின்ற போட்டோ வெளியிடப்பட்டுள்ளதை ஞாபகப்படுத்துகிறோம்)

அத்தோடு இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட மாண்புமிகு அறிஞர்களான மவ்லானா மவ்தூதி, யூசுப் அல் கர்ளாவி போன்றவர்களை சிலர் தூற்றுகிறார்கள் என்று கவலைப்பட்டுள்ளீர்கள். நபியவர்கள் மீது அவதூறு பரப்பி அபாண்டத்தை சுமத்தும் மவ்தூதியையும் மார்க்கத்திற்கு விரோதமான பல பத்வாக்களை சொல்லி மக்களை வழிகெடுத்துவரும் கர்ளாவி போன்றவர்களையும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டினால் உங்களுக்கு கொதிக்கிறது.

நபியவர்கள் மீது அவதூரும், அபாண்டமும் சொன்ன மவ்தூதி உங்கள் பார்வையில் மான்புமிகு அறிஞர் அப்படித்தானே?

நாம் உங்கள் மீதும் ஜமாத்தே இஸ்லாமி மீதும் எடுத்து வைக்கும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் நீங்கள் வெளியிட்ட புத்தகங்களை ஆதாரம் காட்டித்தான் வெளியிடப்பட்டுள்ளது.

நபியவர்கள் மீது மவ்தூதி சொன்ன அவதூருகள் அனைத்தும் உங்கள் ஜமாத்தின் சமரசம் பத்திரிக்கையில்தான் வெளியிடப்பட்டுள்ளது.

அதனால் மீண்டும் மீண்டும் அவதூரு சொல்கிறார்கள், கட்டிங் பேஸ்ட் பண்ணுகிறார்கள், எடிடிங் செய்துவிட்டார்கள் என்று பழைய புராணம் பாடி திரும்பத் திரும்ப பொது மக்களை ஏமாற்றிப் பிழைக்க முடியும் என்று நினைக்காதீர்கள்
.



Saturday, May 14, 2011

தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி – பதில் தருமா ஜமாத்தே இஸ்லாமி.
உலகம் படைக்கப்பட்டிருப்பதைப் போல் ஒரு நாள் கண்டிப்பாக அழிக்கப்படும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த உலகம் அழிகப்படும் முன்பாக அதற்கான பல அடையாளங்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.

மறுமை நாளின் அடையாளங்களில் மிக முக்கியமான அடையாளமாக இஸ்லாம் தஜ்ஜாலின் வருகையைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹ{ஸைன் (ரலி) நூல்: முஸ்லிம் 5239

நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி), நூல்: புகாரி 3057, 3337

ஆதம் நபி படைக்கப்பட்டது முதல் மறுமை நாள் வரையிலும் ஏற்படும் ஆபத்துக்களில் எல்லாம் மிகப் பெரிய ஆபத்தாக நபியவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்தது தஜ்ஜாலுடைய வருகையைத்தான் அதே போல் நூஹ் நபிக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் மரணிக்கவில்லை என்றும் அதே போல் தமது சமுதாயத்தினருக்கும் அவனைப் பற்றி எச்சரிப்பதாகவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இது தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத்தின் இருப்பில் தஜ்ஜாலின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புக் கோரியுள்ளார்கள்.

தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன் என்பதாகும். 
(நூல்: புகாரி 833, 1377, 6368, 6375, 6376, 6377)

மேற்கண்ட செய்திகளைப் போல் தஜ்ஜாலின் தீங்கை விட்டும் நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய செய்திகள் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதியப்பட்டுள்ளது.

தஜ்ஜாலின் வருகை என்பது உலக அழிவின் அடையாளத்தின் மிக முக்கிய விஷயமாகும். இந்தச் செய்திகளை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமினதும் அடிப்படைக் கடமையுமாகும்.

தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி.

தஜ்ஜால் வருவான் அவன்தான் மறுமை நாளின் அடையாளங்களில் மிகவும் ஆபத்தான அடையாளம் என்றெல்லாம் இத்தனை செய்திகள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கும்; போது ஜமாத்தே இஸ்லாமியின் ஸ்தாபகரும், அந்த அமைப்பினரால் பெரிதும் மதிக்கப்படுபவருமான அபுல் அஃலா மவ்தூதி இவையனைத்தையும் மறுத்து நபியவர்களே தஜ்ஜால் விஷயத்தில் கற்பனைக் கருத்தில் தான் இருந்தார்கள் என்று வாதிடுகிறார்.

இந்திய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் அதிகாரப்பூர்வ மாத இதழான சமரசம் பத்திரிக்கையில் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கேள்வி பதில் பகுதியில் இந்தச் செய்தியை அவர்களே வெளியிட்டுள்ளார்.

இதோ தஜ்ஜாலின் வருகை பற்றி மவ்தூதி சொல்வதைக் கவனியுங்கள்:

அபுல் அஃலாவினால் வெளியிடப்பட்ட தர்ஜுமானுல் குர்ஆன் என்ற சஞ்சிகையில் தஜ்ஜால் பற்றி ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் இதுதான்:

தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரீஅத்தின் அந்தஸ்து எதுவுமில்லை. அவனைத் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 
(தர்ஜுமானுல் குர்ஆன் செப்டம்பர்-அக்டோபர் 1945)

அதே போல் அதே சமரசம் பத்திரிக்கையில் ஏப்ரல் மாத இதழில் தஜ்ஜாலைப் பற்றி அபுல் அஃலா மவ்தூதி வெளியிட்ட மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார்கள். 

அந்த இதழில் தஜ்ஜால் தொடர்பாக மவ்தூதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை வெளியிட்டுள்ளார்கள். அந்த பதில் இதுதான்.

இது தொடர்பாக நபி மொழிகளில் கூறப்பட்டுள்ள பல்வேறுபட்ட செய்திகள் நபியவர்களின் எண்ணங்கள் ஆகும்.அதனைக் குறித்து நபியவர்களே சந்தேகத்தில் இருந்தார்கள்.சில போது தஜ்ஜால் குராசானில் தோன்றுவான் என்று கூறுவார்கள்,வேறு சமயம் இஸ்பஹானிலிருந்து இன்னொரு சமயம் ஷாம் மற்றும் ஈராக்கின் மத்திய பகுதியில் இருந்து தோன்றுவான் எனக் கூறுவார்கள்.ஒரு முறை ஹிஜ்ரி இரண்டு அல்லது மூன்றில் பிறந்த இப்னு ஸியாத் என்ற யூதச் சிறுவன் தான் தஜ்ஜால் என்று எண்ணிக் கொண்டார்கள்.

இன்னொரு அறிவிப்பில் ஹிஜ்ரி ஒன்பதில் பலஸ்தீனைச் சேர்ந்த தமீமுத் தாரி என்கிற கிருஸ்தவத் துறவி இஸ்லாமை ஏற்றுக் கொண்டு நபியவர்களிடம் வந்து ஒரு முறை அவர் கடலில் பயணம் செய்ததாகவும் (பெரும்பாலும் ரோமக் கடல் அல்லது அரபிக் கடல்)மக்கள் வசிக்காத ஒரு தீவை அடைந்ததாகவும் அங்கு ஒரு விநோதமான மனிதனுடன் சந்திப்பு ஏற்பட்டதாகவும், அம்மனிதர் தன்னை தஜ்ஜால் என்று கூறிக் கொண்டதாகவும் ஒரு சம்பவத்தைக் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் அச்செய்தியை தவறான நம்பிக்கை எனக்கூறுவதற்கு காரணம் எதுவுமில்லை என நினைத்தார்கள். எனினும் அதுபற்றி சந்தேகத்தை தெரிவித்துவிட்டார்கள். ஆனால் நான் அவன் கிழக்கிலிருந்து தோன்றுவான் என்று கருதுகிறேன். என்றார்கள்.

நபியவர்கள் வஹியின் இல்ம் காரணமாக இவற்றைக் கூறவில்லை. மாறாக சந்தேகத்தின் பேரிலேயே கூறினார்கள் என்பது முதல் கருத்தில் தானாகவே தெரிகிறது.(தர்ஜுமானுல் குர்ஆன் பெப்ரவரி - 1946)
(சமரசம் ஏப்ரல் 1-15)

மேலே மவ்தூதி சொல்லிய கருத்துக்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

தஜ்ஜால் விஷயமாக நபியவர்களே சந்தேகத்தில் இருந்ததாகவும் அதனால் தான் அதைப் பற்றி மாற்றி மாற்றிப் பேசியதாகவும் மவ்தூதி நபியின் மீதே ஒரு அபாண்டத்தை, அவதூரைச் சுமத்துகிறார்.

அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.(53:3,4)

நபியவர்கள் கற்பனையாகப் பேசமாட்டார்கள் குறிப்பாக மார்க்க விஷயத்தில் தனது சுய கருத்தை தெரிவிக்கமாட்டார் தெரிவிக்கவும் முடியாது என்று மிகத் தெளிவாக இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் குறிப்பிடும் போது நபியவர்கள் தஜ்ஜால் விஷயத்தில் சந்தேகத்தோடு இருந்தார்கள் என்று கூறுவது நபியின் மீதே அபாண்டத்தை சுமத்துவதாகும்.

அதே போல் தமீமுத் தாரி (ரலி) அவர்கள் தாம் தீவில் கண்ட மனிதர் தொடர்பான சொன்ன நேரத்தில் நபியவர்கள் அதற்குறிய பதிலை வஹியாக இல்லாமல் சந்தேகமாகத் தான் கூறினார்கள் என்று குறிப்பிடுகிறார்.

உண்மையில் நபியவர்கள் தமீமுத்தாரி (ரலி) அவர்கள் சொன்ன சம்பவம் தொடர்பாக என்ன சொன்னார்கள் என்ற தகவல் மிகத் தெளிவாக முஸ்லிமில் பதியப்பட்டுள்ளது. அதைப்பார்ப்பவர்கள் அனைவரும் அதன் உண்மைத் தன்மையை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

ஆனால் அபுல் அஃலாவுக்கு மாத்திரம் அது சந்தேகமாகத் தெரிகிறது. ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் தானே !

இதோ தமீமுத் தாரி தொடர்பான செய்தியைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பதைச் செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார் கள். ஒவ்வொருவரும் தொழுத இடத்திலேயே இருங்கள் என்று கூறிவிட்டு நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ, ஆர்வமூட்டவோ உங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். 

அவர் கூறியதாவது:

லக்ம், ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில் ஒதுங்கினோம். சிறு கப்பல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போது அதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எது? சிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை.

அப்பிராணியிடம் உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணி? என்று கேட்டோம். நான் ஜஸ்ஸாஸா என்று அப்பிராணி கூறியது. நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார் எனவும் அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.

நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கே பருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலை சேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான். உனக்குக் கேடு உண்டாகட்டும். ஏனிந்த நிலை? என்று நாங்கள் கேட்டோம்.

அதற்கு அம்மனிதன், என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள். எனவே நீங்கள் யார்? என எனக்குக் கூறுங்கள் என்றான்.

நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம் கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம். அடர்ந்த மயிர்களைக் கொண்ட ஒரு பிராணியைக் கண்டோம். அப்பிராணி நான் ஜஸ்ஸாஸா ஆவேன். இந்த மடாலயத் தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம். எனக் கூறினோம்.

பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவா? என எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன் 'விரை வில் அங்குள்ள மரங்கள் பலனளிக்காமல் போகலாம் என்றான்.

தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக் கூறுங்கள்! அதில் தண்ணீர் உள்ளதா? என்று அவன் கேட்டான். அதில் அதிகமான தண்ணீர் உள்ளது என்று நாங்கள் கூறினோம். அந்தத் தண்ணீர் விரைவில் வற்றி விடக் கூடும் என்று அவன் கூறினான்.

{கர் என்னும் நீரூற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால் விவசாயம் செய்கிறார்களா? என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் ஆம்! தண்ணீர் அதிகமாகவே உள்ளது அங்குள்ளோர் அத்தண்ணீரால் விவசாயம் செய்து வருகின்றனர் என்றோம்.

உம்மி சமுதாயத்தில் தோன்றக் கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார் என்று கூறினோம்.

அவருடன் அரபுகள் போர் செய்தார்களா? என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். போரின் முடிவு எவ்வாறு இருந்தது? என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் அவர் தன்னை அடுத்துள்ள அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார் எனக் கூறினோம். அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும் என்று அவன் கூறினான்.

நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன். நான் தான் தஜ்ஜால் ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். ப+மி முழுவதும் பயணம் செய்வேன். (நான் பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும், மக்கா, மதீனா ஆகிய இரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார். அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர் என்று அம்மனிதன் கூறினான்.

இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி, இது (மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா@ இது தைபா எனக் கூறினார்கள். 'இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா? என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ஆம் என்றனர்.

அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், இல்லை, இல்லை, அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 5235. 

இதுதான் தமீமுத் தாரி அவர்கள் தொடர்பான செய்தி இந்தச் செய்தியில் தான் அபுல் அஃலாவுக்கு பிரச்சினை உண்மையில் இந்தச் செய்தியில் நபியவர்கள் மிகத் தெளிவாக தஜ்ஜால் எங்கிருந்து வருவான் என்பதை குறிப்பிடும் போது அதில் நபியவர்கள் வஹியில்லாமல் பேசினார்கள் என்று கூறுவது அபாண்டமில்லையா? அவதூரில்லையா? மேதாவித் தனமில்லையா?

தஜ்ஜால் வெளிப்படும் இடம் தொடர்பாக நபியவர்கள் சொன்ன இடங்கள் அனைத்தையும் அடிப்படையாக வைத்து முடிவெடுக்க வேண்டிய மவ்தூதி நுனிப்புல் மேய்ந்தது எதற்காக? நபியவர்கள் மீது அபாண்டமான ஒரு பழியை சுமத்துவதற்கு இவருக்கு என்ன தேவை இருக்கிறது?

அதைத் தொடர்ந்து மவ்தூதி சொல்லும் வாசகத்தைக் கவணியுங்கள்.

தமீம் தாரி அவர்கள் அவர்கள் கூறிய சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் சரியானது என நினைத்தார்கள். எனினும் பதின் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தமீம் தாரி  அத்தீவில் பார்த்த நபர் வெளிப்படவில்லை. அவ்வாரிருக்க அம்மனிதர் தன்னைத் தஜ்ஜால் என்று தமீம் தாரி அவர்களிடம் கூறியது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமானதாக இல்லையா?

நபி (ஸல்) அவர்களுக்கு தஜ்ஜால் தம்முடைய காலத்திலேயே தோன்றுவான் அல்லது தமக்குப் பிறகு வெகு விரைவில் தோன்றுவான் என்கிற எண்ணம் இருந்தது. பதின் மூன்றரை நூற்றாண்டு வரலாறு நபியவர்கள் நினைத்தது சரியல்ல என்பதை உறுதிப்படுத்தவில்லையா? (தர்ஜுமானுல் குர்ஆன் பெப்ரவரி - 1946) (சமரசம் ஏப்ரல் 1-15)

பதின் மூன்றரை நூற்றாண்டுக் பிறகும் தமீமுத் தாரி அத்தீவில் பார்த்த நபர் வெளிப்படவில்லையாம் அதனால் அந்தச் செய்தி பொய்யானது என்பதும், தஜ்ஜால் தனது காலத்தில் அல்லது தனக்குப் பின் வெகு விரைவில் தோன்றுவான் என்ற எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததாம். பதின் மூன்று நூற்றான்டுகள் கடந்தும் இன்னும் தஜ்ஜால் வெளியாகவில்லையாம். ஆதனால் நபியவர்கள் தஜ்ஜால் விஷயத்தில் தவறான எண்ணமே கொண்டிருந்தார்கள் என்று நபியின் மீதே அவதூரு சொல்லி வாதிக்கிறார் மவ்தூதி.

மறுமை நாளின் அடையாளம் என்று சொன்ன தஜ்ஜால் மவ்தூதியின் காலம் வரை வெளியாகவில்லை என்பதினால் தஜ்ஜாலின் வருகையே பொய் என்று முடிவெடுக்கிறார் இந்த மாபெரும் அறிஞர் (?) மவ்தூதி.

இவரின் ஆய்வுப் (?) படி பார்த்தால் மறுமை நாள் பற்றி நபியவர்கள் சொன்னதும் பொய்யென்ற முடிவுக்குத் தான் மவ்தூதியும் அவரை இமாமாக ஏற்றுச் செயல்படும் ஜமாத்தே இஸ்லாமியினர் வரவேண்டிவரும்.
ஏன் என்றால் மறுமை நாளைப் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லியதைப் பாருங்கள்.

சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான். (திருக்குர்ஆன் 78:40)

அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. (திருக்குர்ஆன் 54:1)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டி நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம் எனக் கூறினார்கள்.  அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),  நூல்: புகாரி 4936, 5301, 6503

மறுமை நான் மிகவும் அருகாமையில் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். நபியவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டி நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம் எனக் கூறினார்கள். 

நபியவர்கள் மறுமை பற்றிக் கூறி பதின் நான்கு நூற்றாண்டுகள் கடந்துவிட்டது இதுவரைக்கும் மறுமை நாள் ஏற்படவில்லை அதனால் மறுமை நாளே ஏற்படாது என்று இவர்கள் வாதிடுவார்களா?

இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமீர் (?) ஹஜ்ஜுல் அக்பரிடம் சில கேள்விகள்.

உஸ்தாத்(?) ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே ! 

கடந்த ஏப்ரல் மாத அல்ஹஸனாத்தில் தஃவாக் களம் பகுதியில் குர்ஆன், {ன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தீர்கள், அந்தக் கட்டுரையில் குர்ஆன் சுன்னாவை மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசுவதென்றால் சிலைகள் கூடாது என்று சொல்லக் கூடாது அப்படித்தானே? ஏன் என்றால் சிலையை வணங்குபவனின் மனம் புன்பட்டுவிடும் பாவம்.

அதே போல் தர்காக்களை வணங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யக் கூடாது. (நீங்கள் தர்காக்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனி விஷயம்) ஏன் என்றால் தரிக்கா வாதிகளின் மனதுகள் புன்படும் அப்படித்தானே?

விபச்சாரம் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்யப் கூடாது ஏன் என்றால் விபச்சாரம் செய்பவனின் மனது புன்பட்டுவிடும் அப்படித் தானே?

இப்படி அடுத்தவர்களின் மனது புன்பட்டுவிடாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டுக்குள் வந்தால் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் இலச்சனம் உங்களைப் போல் ஷீயா மதத் தலைவர்களுடன் தான் கைகோர்க்க வேண்டிவரும் (பெப்ரவரி மாத அழைப்பில் ஷீயா மதத் தலைவருடன் தாங்கள் நின்ற போட்டோ வெளியிடப்பட்டுள்ளதை ஞாபகப்படுத்துகிறோம்)

அத்தோடு இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட மாண்புமிகு அறிஞர்களான மவ்லானா மவ்தூதி, யூசுப் அல் கர்ளாவி போன்றவர்களை சிலர் தூற்றுகிறார்கள் என்று கவலைப்பட்டுள்ளீர்கள். நபியவர்கள் மீது அவதூறு பரப்பி அபாண்டத்தை சுமத்தும் மவ்தூதியையும் மார்க்கத்திற்கு விரோதமான பல பத்வாக்களை சொல்லி மக்களை வழிகெடுத்துவரும் கர்ளாவி போன்றவர்களையும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டினால் உங்களுக்கு கொதிக்கிறது.

நபியவர்கள் மீது அவதூரும், அபாண்டமும் சொன்ன மவ்தூதி உங்கள் பார்வையில் மான்புமிகு அறிஞர் அப்படித்தானே

நாம் உங்கள் மீதும் ஜமாத்தே இஸ்லாமி மீதும் எடுத்து வைக்கும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் நீங்கள் வெளியிட்ட புத்தகங்களை ஆதாரம் காட்டித்தான் வெளியிடப்பட்டுள்ளது. 

நபியவர்கள் மீது மவ்தூதி சொன்ன அவதூருகள் அனைத்தும் உங்கள் ஜமாத்தின் சமரசம் பத்திரிக்கையில்தான் வெளியிடப்பட்டுள்ளது. 

அதனால் மீண்டும் மீண்டும் அவதூரு சொல்கிறார்கள், கட்டிங் பேஸ்ட் பண்ணுகிறார்கள், எடிடிங் செய்துவிட்டார்கள் என்று பழைய புராணம் பாடி திரும்பத் திரும்ப பொது மக்களை ஏமாற்றிப் பிழைக்க முடியும் என்று நினைக்காதீர்கள். 

தைரியம் இருந்தால் கட்டிங் பேஸ்டா, எடிட்டிங்கா, அவதூரா என்பதைப் பற்றி பொது மேடையில் வந்து பேசுங்கள் ஆதாரத்தை அள்ளிப் போடத்தயாராக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

Tuesday, May 10, 2011

இலங்கை மத்ரஸாக்களின் இன்றைய நிலை(?)

இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் எத்தி வைக்க வேண்டும் என்பதற்காக பண்னெடுங் காலமாக நம் மத்தியில் பல அரபிக் கல்லூரிகள் தோற்றம் பெற்று பல்லாயிரக் கணக்கான ஆலிம்களை உருவாக்கியிருக்கிறது, உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கல்லூரிகளின் நிலைமைகள், கொள்கைகளை மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

ஏன் என்றால் இன்று நமக்கு மத்தியில் மார்க்கப் பிரச்சாரத்திற்கு பாடுபடுவதாக பிதற்றிக் கொள்ளும் பல கல்லூரிகள் ஆலிம்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகத் தான் இருக்கின்றன என்பதே உண்மை.

வருடத்திற்கு இத்தனை பேரை உருவாக்கினோம், இந்த வருடம் இத்தனை பேர் பட்டம் பெற்றார்கள், இந்தனை பேர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானார்கள் என்ற வரி விளப்பரத்திற்காக போராடும் பல கல்லூரிகள் நமக்கு மத்தியில் இருப்பதைப் பார்க்கிறோம். 

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.அல்லாஹ் மிகைத்தவன் மன்னிப்பவன்.(35:28)

அல்லாஹ் உலகில் படைத்தவர்களில் மிகவும் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான் என்று இறைவன் மேற்கண்ட வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.ஆனால் இன்றைய நிலையோ இதற்கு நேர் மாற்றமாக இருப்பதைப் பார்க்கிறோம். 

தங்களை அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் இறையச்சத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்று சந்தேகப்படவேண்டியுள்ளது. தனது இளமைக் கல்வியை சிறந்த முறையில் மார்க்கத்தின் நிழலில்  அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அரபிக் கல்லூரிகளைத் தேடி வரும் சிறார்கள் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றுக் கல்வி புகட்டப்படுகிறார்கள். 

மட்டுமன்றி ஏமாற்றுக் கல்விக்கு வேட்டு வைக்கிறோம் என்று கிளம்மி ஏகத்துவக் கல்லூரிகள் நடத்துவதற்கு தயாரான எத்தனையோ பேர் அவற்றை தமது பிழைப்புக்குறிய வழியாக மாற்றியிருப்பதைக் காண முடிகிறது.

ஏழு வருடங்கள், ஐந்து வருடங்கள் என்று பாடத்திட்டத்தை அமைத்துள்ள எத்தனையோ மத்ரஸாக்கள் தனது கல்லூரி மாணவர்களுக்கு இஸ்லாத்தின் சரியான அடிப்படையைக் சொல்லிக் கொடுப்பதில்லை.

ஷாபி என்றும் ஹனபி என்றும் மத்ஹபுகளுக்கு வக்காளத்து வாங்கும் இவர்கள் மத்ஹபு தொடர்புடைய நூல்களைத் தான் பாடத்திட்டத்தில் கூட சேர்திருப்பார்கள்.இவர்களினால் உருவாக்கப்பட்டு வரும் இந்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாகிறது? 

மரண வீட்டில் யாசீன் ஓதுவதும், காலத்திற்குக் காலம் மவ்லிது ஓதுவதும் தான் இவர்களின் பிழைப்பாக மாறுகிறது.

தவ்ஹீத் போர்வையில் உருவான அரபிக் கல்லூரிகளின் இன்றைய அவல நிலை (?)

மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இலங்கைத் திரு நாட்டில் பல ஏகத்துவக் கல்லூரிகள் கால் பதித்தன. அவற்றில் பல தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன என்பது தனிக்கதை.

சில கல்லூரிகள் இன்றிருந்தாலும் அவற்றின் சமூகப்பணி (?) பெரும் கவலையளிப்பதாகத் தான் இருக்கிறது.

தெளிவான மார்க்க அறிஞர்களாக மாணவர்களை உருவாக்குகிறோமோ இல்லையோ பி.ஏ பட்டதாரிகளாக மாற்றிவிட வேண்டும் என்பதே இந்தக் கல்லூரிகளின் நவீன பாடத்திட்டமாக இருக்கிறது.

பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது தான் முழு நேரப்பணியாக மாறி மார்க்கக் கல்வி பகுதி நேரமாக இந்த கல்லூரிகளில் மாறிவிட்டதே கவலையளிக்கிறது.

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.(58:11)

அல்லாஹ்விடத்தில் உயரிய தகுதியை நாம் அடைய வேண்டுமென்றால் அவனை நம்புவதைப் போல் அவனுடைய மார்க்கத்தையும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் நமக்கு எடுத்தியம்புகிறது.

ஆனால் இந்த மார்க்கக் கல்வியின் தேவை இன்று குழி தோண்டிப் புதைக்கப்படுவதை கண்முன் காணக்கூடியதாக இருக்கிறது.

அரபு நாட்டுப் பணத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட பல கல்லூரிகளை இன்று காணக்கிடைப்பதில்லை.ஒன்றிரண்டு ஆங்காங்கே இருந்தாலும் அவற்றிற்கும் மார்க்கப்பிரச்சாரத்திற்கும், கொள்கை உறுதிக்கும் தொடர்பில்லை.

பரகஹதெனிய அஸ்ஸலபிய்யா, மஹரகம கபூரிய்யா, காலியில் இருக்கும் இப்னு அப்பாஸ், பாலமுனை ஸஹ்வா போன்ற எத்தனையோ அரபிக் கல்லூரிகளை தவ்ஹீத் பேர் தாங்கி கல்லூரிகளாகவே எண்ணத் தோன்றுகிறது.

குர்ஆனையும்,ஹதீஸையும் மாத்திரம் போதிப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலான பாடத்திட்டங்களில் மத்ஹபு நூல்களே குடி கொண்டுள்ளன.

இன்று வரைக்கும் பிக்கு, தப்ஸீர் என்று இவர்கள் எதைப் படித்துக் கொடுத்தாலும் அந்தப் பாடத்திட்டம் மத்ஹபு சார்ந்ததாகத் தான் இருக்கிறது.

பெயருக்கு குர்ஆன், ஹதீஸ் என்று பேனர் போட்டுக் கொள்வதுதான் இவர்களின் வேலையாக இருக்கிறது.

இஸ்லாமிய அகீதாவை சரியாக மக்கள் மத்தியில் எத்தி வைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மத்தியில் உள்ள தொடர்பைப் பார்த்தாலே இந்தக் கல்லூரிகளில் ஏகத்துவத்தின் நிலையை அடையாளம் காண முடியும்.

ஆசிரியர்களைக் கண்டால் ஆறுக்கு மடியும் மாணவர்கள், வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழையும் போது எழுந்து நிற்கப் பழக்கப்பட்டிருப்பதும் இவர்களின் தவ்ஹீதின்(?) உச்ச கட்டம் எனலாம்.

நபியவர்கள் வரும் போதே நபித் தோழர்கள் அமர்ந்த வண்ணம் தான் இருந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன ஆனால் இவர்கள் வரும் போது மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று இந்தக் கல்லூரிகளின் சட்டம் சொல்கிறது.

ஸலபிகள் என்ற பெயரால் மூலைச் சலவை செய்யப்படும் இந்த அப்பாவி மாணவர்கள் இவர்களைப் போலவே குர்ஆன்,ஹதீஸ{டன் மூன்றாவதாக ஸலபிகளையும் ஆதாரங்களாக எடுக்கும் ஆத்மீகக் கொள்கையிலேயே வளர்க்கப்படுகிறார்கள்.

கொள்கையில்லை, கோட்பாடு இல்லை, கொண்ட கொள்கையில் தெளிவில்லை மக்கள் மத்தியில் சத்தியக் கொள்கையை உடைத்துச் சொல்ல தைரியமில்லை ஆனால் இவர்கள் கொள்கை பேசுவதில் வள்ளவர்களாம்.

இந்த தவ்ஹீத் பெயர் தாங்கி கல்லூரிகளின் அதிபர், ஆசான்கள் தங்கள் மத்ரஸா வளாகத்திற்குள் பள்ளியைக் கட்டி வைத்துக் கொண்டு பித்அத் வாதியின் பள்ளிக்கு ஜும்மாவிற்கு தாங்களும் சென்று தங்கள் மாணவர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். தங்கள் மத்ரஸாவில் இருக்கும் பள்ளியில் ஒரு ஜும்ஆ நடத்துவதற்கு இவர்களுக்கு திராணியில்லாமல் போய்விட்டது தான் கவலை.

என்று நீங்குமோ இந்த அவல நிலை.

நாம் அறிந்தவரை காலி இப்னு அப்பாஸ் போன்ற மத்ரஸாக்களில் இன்னும் மத்ரஸா வளாகத்தில் ஜும்மா தொழுகை கிடையாது. மார்க்கத்திற்கு முரனான, பித்அத் நடக்கும் பள்ளியில் தான் இது வரைக்கும் அவர்கள் ஜும்மா தொழுகிறார்கள் என்பதே உண்மை.

தவ்ஹீத் வாதிகளாக தம்மை காட்டிக்கொள்ள முயலும் இந்த மத்ரஸாவின் ஆசிரியர் குழாமும், நிர்வாகமும் உண்மையில் ஜமாத்தே இஸ்லாமியை ஆதரிக்கும் போலி தவ்ஹீத் வாதிகள் என்பதே உண்மை.

தங்கள் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களுக்கு விஷேட அதிதிகளாக ஜமாத்தே இஸ்லாமியின் அமீரை அழைத்து விருந்து வைப்பதும், தங்கள் இணையதளங்களில் அவர்களின் ஆசிச் செய்திகளை வெளியிடுவதும், அவர்களின் கல்லூரிகளில் இவர்களும் சென்று பகுதி நேர பாடம் நடத்துவதும் தற்போது வழமையாகிவிட்ட கதைதான்.

தங்கள் பிழைப்புக்காக ஒரு காலத்தில் கத்தம், பாத்திஹா ஓதிய மவ்லவிமார்களைப் பார்த்தோம்.

தங்கள் பிழைப்பிற்காக கொண்ட கொள்கையையே அடகு வைப்பவர்களை தற்காலத்தில் பார்க்கிறோம். இவர்களின் இந்த செயல்பாட்டால் மீண்டும் மத்ஹபு கொள்கைக்கு வக்காலத்து வாங்கும் மவ்லவிமார்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்களே தவிர குர்ஆன் சுன்னாவை பேசுபவர்கள் களத்தில் இருப்பது அரிதாகவே உள்ளது.



Monday, May 2, 2011

தக்லீ்த் ஓர் ஆய்வு. (தொடர் 03)
         ஸஹாபாக்களின் கருத்துக்கள் மார்க்க ஆதாரங்களாகுமா?

ஸஹாபாக்களைப் பின்பற்றுவதும் வழிகேடுதான் என்பது தொடர்பாக கடந்த தொடர்களில் நாம் தெளிவாக விளக்கியிருந்தோம்.

இதே நேரம் சகாபாக்கள் நம்மை விட ஈமானில் முதியவர்கள் என்பதில் எல் முனையளவுக்கும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் நபியவர்களின் தோழர்களும் மனிதர்கள் என்பதினால் அவா்களும் பல இடங்களில் குா்ஆன், சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களை சொல்லியுள்ளார்கள். அவை எவை என்பது தொடர்பாக இந்தத் தொடரில் நாம் பார்ப்போம்.

முத்தலாக்கும் உமர் பின் கத்தாப் (ரலி) அவா்களும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும்அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலி) அவர்கள்நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?) என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) , நூல் : (முஸ்லிம் 2689)

முத்தலாக் என்று கூறினால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர். ஸஹாபாக்களைப் பின்பற்றலாம், அவா்களைப் பின்பற்றுவதும் நன்மைதான் என்ற கொள்கையுடையவர்கள் இந்தச் செய்தியை ஊன்றி கவணிக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.

நபியவர்கள் எதனை ஒரு தலாக் என்று சட்டம் சொன்னார்களோ அந்த சட்டத்தை அப்படியே மாற்றி உமர் (ரலி) அவா்கள் முத்தலாக் என்று சட்டம் சொல்கிறார்கள். இப்போது நபியைப் பின்பற்றுவதா? அல்லது உமரைப் பின்பற்றுவதா? என்ற கேள்வி எழுகிறது.

உண்மையான ஏகத்துவவாதி ஸஹாபாக்களை தனது தலை மேல் வைத்து மதிக்க வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஸஹாபாக்களை பின்பற்றலாம் என்ற கருத்தை ஒரு ஏகத்துவவாதி ஏற்றுக்கொள்ளமாட்டான், ஏற்றுக் கொள்ளவும் கூடாது என்பதே இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடாகும்.

அபூமூஸா (ரலிஅவா்களும், ஆதாரம் கேட்ட உமர் பின் கத்தாப் (ரலி) அவா்களும்.

உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். உமர் (ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனேஅபூமூஸா (ரலி) திரும்பி விட்டார். அலுவலை முடித்த உமர் (ரலி), 'அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதியளியுங்கள்என்றார்கள். 'அவர் திரும்பிச் சென்று விட்டார்என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி)அபூமூஸா (ரலி)யை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றீர் என்று கேட்ட போது)இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், 'இதற்குரிய சான்றை என்னிடம் நீர் கொண்டு வாரும்  என்று கூறினார்கள்.

உடனே அபூமூஸா (ரலி) அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள்நம்மில் இளையவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் சாட்சி சொல்ல மாட்டார்கள் என்று கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) யை உமர் (ரலி) யிடம் அபூமூஸா (ரலி) அழைத்துச் சென்றார். (அபூஸயீத் அல்குத்ரீ சாட்சி கூறியதும்) உமர் (ரலி)நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதாநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கடைவீதிகளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது போலும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைத் பின் உஸாமா   நூல்: புகாரி 2062, 6245

நபியவர்களின் தோழர்களின் மிக முக்கியமானவர்களின் ஒருவர் தான் உமர் (ரலி) அவா்கள், அவா்களுக்கே மேற்கண்ட சட்டம் தெரியாமல் இருந்திருக்கிறது. காரணம் வியாபாரத்தில் ஈடுபட்டதினால் சில நேரங்களில் நபியிடத்தில் அவா்களுக்கு இருப்பதற்குக் கிடைக்கவில்லை. அதனால் தான் அவா்களுக்கு சில சட்டங்கள் தெரியாமல் போய் இருக்கிறது என்பது மேற்கண்ட ஹதீஸில் இருந்து தெரியவரும் உண்மையாகும்.

கொள்ளை நோயின் பரவலும் அப்துர் ரஹ்மான் பின் அவ்பின் தெளிவும்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போதுபடைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்துஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள்ஷாம் நாட்டிற்குப் போகலாமாஎன்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள்இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்என்று சொல்ல நான் கேட்டேன்என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 5279

கொள்ளை நோய் பரவுதல் தொடர்பாக நபியவர்கள் தெரிவித்த மேற்கண்ட செய்தி ஸஹாபாக்களைப் பின்பற்ற முடியும் என்று சொல்பவர்கள் முதற் கொண்டு அநேகருக்குத் தெரியும். ஆனால் உமர் (ரலி) அவா்களுக்கு அது தொடர்பான செய்தி தெரியாமல் இருந்திருக்கிறது. என்பதை மேற்கண்ட செய்தி நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

குளிப்பு எப்போது கடமை?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டேன். அதற்கு மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)    நூல் : புகாரி 293

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.

பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல்கள் : முஸ்லிம் 526, திர்மிதீ 102

சட்டம் மாற்றப்பட்ட விஷயம் அனைவரும் பெரும்பாலும் அறிந்த ஒன்று. ஆனால் இந்தச் சட்டம் தெரியாமல் உஸ்மான் (ரலி) அவர்கள்இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமையில்லை என்று கூறியுள்ளார்கள்.

ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்னஎன்று நான் உஸ்மான் (ரலி)யிடம் கேட்டேன். அதற்குஅவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டுதொழுகைக்கு உளூச் செய்வது போன்று செய்ய வேண்டும். இதை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)  நூல்: புகாரி 179, 292

மாற்றப்பட்ட இந்தச் சட்டம் உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் போயுள்ளது. நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பவர்கள் இப்போது உஸ்மானைப் பின்பற்றுவார்களா? அல்லது நபியவர்களைப் பின்பற்றுவார்களா?

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மம் செய்வது கூடுமா?

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி)அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) யிடம்அபூ அப்திர்ரஹ்மானே ! குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்என்று கேட்டார். தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லைஎன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானதுஎன்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்என்று கேட்டார். அதற்கு, (இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதாஎன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) பதில் கூறினார்.

அம்மார் அறிவிப்பதை விட்டு விடுங்கள். தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்ற இறை வசனத்தை என்ன செய்வீர்கள்என்று அபூமூஸா (ரலி) கேட்டார். அதற்குஇந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் உளூச் செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தாம் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலேயே சொல்லி விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா   நூல்: 346, 347

குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யுங்கள் என்ற தெளிவான அனுமதி குர்ஆனில் இருந்தும்அது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டும்சொந்த ஊகத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கின்றார்கள். இது எதைக் காட்டுகின்றது?

நபித் தோழர்களைப் பின்பற்றலாம் என்றால் இப்னு மஸ்ஊத் (ரலி) அவா்கள் விஷயத்தில் என்ன தீர்பை சொல்லுவது?

நபிகள் நாயகத்தின் மரணமும், குா்ஆனின் தீர்ப்பும்.

(நபி - ஸல் அவர்கள் இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்து விட்டு) அபூபக்ர் (ரலி) வெளியே வந்தார்கள். அப்போது உமர் (ரலி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும்அவரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) உட்கார மறுத்ததும்மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவேஅபூபக்ர் (ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி)யிடமிருந்து அபூபக்ர் (ரலி)யிடம் திரும்பினர்.

அப்போது அபூபக்ர் (ரலி)உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன். மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத்தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களாவந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144) என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாகஅபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதை அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 1242, 3670

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர். குர்ஆனில் உள்ள ஒரு விஷயம்நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்ததை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் சுட்டிக் காட்டியதால் நபித்தோழர்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர். இது போன்று சுட்டிக் காட்டப்படாத எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன.

நபித் தோழர்களையும் பின்பற்றலாம், அதுவும் மார்க்கம் தான் என்று பிதற்றக் கூடியவர்கள் இந்தச் செய்திக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

ஆய்வு தொடரும்...................